சமையல் குறிப்புகள்

காளான் ஆலூ கோப்தா

தேவையான பொருட்கள் :

  • காளான் – ஒன்றரை கப்,
  • உருளைக்கிழங்கு – ஒன்று,
  • பச்சை மிளகாய் – 2 ,
  • கொத்தமல்லித் தழை – தேவையான அளவு,
  • வறுத்த கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
  • கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
  • வறுத்த கசகசா – ஒரு டீஸ்பூன்,
  • சீரகம் – அரை டீஸ்பூன்,
  • ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.




அரைக்க:

  • பெரிய வெங்காயம் – 2
  • பூண்டு – 6 பல்,
  • சீரகம் – அரை டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
  • மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய் – 4,
  • ஏலக்காய் – ஒன்று,
  • உப்பு – சிறிதளவு,
  • தக்காளி – ஒன்று




செய்முறை:

  • தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும்.
  • இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும்.
  • பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடானதும் செய்து வைத்த உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
  • இதுவே காளான் ஆலூ கோப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).
  • மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
  • பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • கிரேவி கெட்டியாகும்போது பொரித்து வைத்த கோப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
  • சூப்பரான காளான் ஆலூ கோப்தா ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker