ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்மருத்துவம்

காபி பிரியரா நீங்க? இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிஞ்சிக்கோங்க… விளக்கும் குடல் நிபுணர்!

பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக காபி திகழ்கின்றது. காபி குடிக்காம நாளே விடியாது’ என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் அதீத புத்துணர்வு தான்.

காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.

காபி பிரியரா நீங்க? இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிஞ்சிக்கோங்க... விளக்கும் குடல் நிபுணர்! | What Do Doctors Say About Drinking Coffee

ஆனாலும் காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா? தினசரி காபி குடிப்பது உடல் ஆரோக்கியதில் பாதிப்பை எற்படுத்துமா? போன்ற பல சந்தேகங்கள் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.

இப்படி பலரின்  மனதில் உள்ள காபி குடிப்பது குறித்த கேள்விகளுக்கு எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற, கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.     காபி பிரியரா நீங்க? இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிஞ்சிக்கோங்க... விளக்கும் குடல் நிபுணர்! | What Do Doctors Say About Drinking Coffee

காபி பாலையில் குடிக்க ஒரு நல்ல உணவு பானம் தான். ஆனால் அதனை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கூடாது. புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்த்து காபிளை எடுத்துக்கொள்ளும் போது சிறந்த பானம் தான் என குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.

காபி பிரியரா நீங்க? இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிஞ்சிக்கோங்க... விளக்கும் குடல் நிபுணர்! | What Do Doctors Say About Drinking Coffee

கொழுப்பு கல்லீரலுக்கு காபி நல்லதா? என்ற கேள்வி பெரும்பாலானவர்களுக்கு காணப்படுகின்றது. இது குறித்து பேசுகையில், காபியை மிதமான அளவில் குடித்தால், அது கொழுப்பு கல்லீரல் மற்றும் ஃபைப்ரோஸிஸ் அபாயத்தைக் குறைக்க துணைப்புரியும் என குறிப்பிடுகின்றார்.

காபி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? என்றால் நிச்சயம் கிடையாது. ப்ளைன் காபி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது மாறாக அதிக சர்க்கரை சேர்த்து காபி குடிப்பது தான் ரத்த சர்க்கரைக்கு காரணம். மேலும், தொப்பை அல்லது எடை இழப்புக்கு காலி நல்லதா?  என்றால், காபியானது மறைமுகமாக உடல் பருமன் அல்லது தொப்பையைக் குறைக்க உதவி செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

காரணம் காபி  இது குறுகிய காலத்தில் பசியுணர்வைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை மேம்படுத்துவதால், பசியை கட்டுப்படுத்த உதவுகின்றது.

காபி கொழுப்பை அதிகரிக்கும்? என்ற சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.ஆனால்  ஃபில்டர் செய்யப்படாத காபி உடலில் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவை சிறிது அதிகரிக்கும் என குறிப்பிடும் மருத்துவர்,காபியில் ஃபில்டர் காபி தான் மிகவும் சிறந்தது மற்றும் ஆரோக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker