ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு

நள்ளிரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக பலரும் வைத்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவு என்னவெனில் பிரியாணி ஆகும். பிரியாணிக்கு பொரித்த சிக்கன், தயிர் வெங்காயம் என பல வகைகளில் வைத்து சாப்பிடுவார்கள்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிரியாணி, பல வகைகளில் செய்யப்படுகின்றது. சிக்கன், மட்டன், மீன், இரால், நாட்க்கோழி, வான்கோழி என பல வகைகள் உள்ளது.

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு | Midnight Biryani Eating Danger And Health Issue

தற்போதைய மக்களின் அதிக விருப்பமாக நள்ளிரவு நேரத்தில் வெளியே சென்று பிரியாணி சாப்பிடுவதை புது பழக்கமாக கொண்டுள்ளனர்.

இவற்றினை ஒரு பொழுதுபோக்காகவும், இவ்வாறு சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் மற்றவர்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.

நள்ளிரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக இரவு நேரங்களில் நமது உடல் உறுப்புகள் ஓய்வு எடுக்க வேண்டிய நேரமாகும். நமது ஜீரண மண்டலம் ஓய்வு எடுக்கும் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவது உடம்பிற்கு கேடு ஆகும்.

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது வயிறு உப்புசம், ஜீரண பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து நீண்ட நாட்களாக பிரியாணி சாப்பிடுவது நீரிழிவு நோய், கல்லீரல் பிரச்சனை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு | Midnight Biryani Eating Danger And Health Issue

அதுமட்டுமின்றி இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் மன உளைச்சல், மனச்சோர்வு போன்ற பிரச்சனையை ஏற்படுத்துவதால் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

அப்படியே நள்ளிரவு நேரங்களில் உங்களுக்கு பசி எடுத்துவிட்டால், தண்ணீர் குடித்துவிட்டு தூங்குவதற்கு முயற்சிக்கலாம். அவ்வாறு இல்லையெனில் வாழைப்பழம் போன்ற மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு | Midnight Biryani Eating Danger And Health Issue

வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதுடன், தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்பு இரவு சாப்பாடை முடித்துவிட வேண்டும்.

மேலும் செரிமானத்தை சீராக வைப்பதற்கு சால்ட், சூப் அல்லது சிற்றுண்டியாக பயறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை இரவு 9.30 மணிக்கும் உங்களது சாப்பாடு வேலைகளை முடித்துவிட வேண்டும்..

நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு | Midnight Biryani Eating Danger And Health Issue

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker