தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக பெண்கள் உடல் பருமனால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் ஏகப்பட்ட நோய்களும் வர ஆரம்பித்துள்ளது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்க இயல்பாகவே தொப்பை தொங்கிய நிலையில் இருக்கும்.
சிலருக்கு தலை முதல் கால் வரை உடல் பருமன் அளவாக இருக்கும். ஆனால் இன்னும் சிலர் உடல் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் இடுப்பு பகுதியில் கொழுப்பு நிறைந்து வயிற்றில் தொப்பையும் இருக்கும்
இது பார்ப்பதற்கு அவர்களின் உடல் அமைப்பையே வித்தியாசமாக காட்டும். இதனை குறைப்பதற்கு பெண்கள் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஆயுள்வேத மருத்துவர் ஒருவர் தொப்பையில் இருக்கும் கொழுப்பை எப்படி குறைக்கலாம் என்பதை சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இது குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பொதுவாக 40 முதல் 45 வயது வந்த பெண்களுக்கு வயிற்று பகுதியில் தொப்பை விழ ஆரம்பித்து விடும். இது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது தவறான வாழ்க்கை முறை காரணமாக இளம் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கு விழ ஆரம்பித்து விட்டது.
மரபணு வழியாக சிலருக்கு இடுப்பு பகுதி பருமனாக இருந்தாலும் இந்த வயிறு சுற்றி தொப்பை அதிகமாக இருக்கும். கல்லீரலில் இருந்து வரும் கொழுப்புகள் ட்ரைகிளிசரைடுகள் அளவுகள் இரத்தத்தில் அதிகரிப்பதால் பருமன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கல்லீரலில் இருந்து கெட்ட கொழுப்புகள் வில்டிஎல் அதிகமாக சுரக்கப்படும் அந்த சமயத்தில் ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் கிடைக்க கூடிய உணவுகள் எடுக்காத போது இடுப்பை சுற்றி கொழுப்புக்கள் படிய ஆரம்பிக்கும்.
1. ஹார்மோன் குறைபாட்டு பிரச்சினையுள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்ற ஹார்மோன், ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன், டெஸ்ட்ரோஸ்ட்ரோன் அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் சமயத்தில் டென்ஷன் அதிகமாக இருக்கும்.
அப்போது சில பெண்களுக்கு சிறிய விடயங்களுக்கு கூட கோபம், சலிப்பு கொள்வார்கள். இது அவர்களுக்கு மன அழுத்த பிரச்சினை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிக்கும். இதனால் அவர்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் மன அழுத்தம், கவலை, டென்ஷன், தனிமை போன்ற உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். இது தான் தொப்பைக்கான முதல் காரணமாகும்.
2. மாதவிடாய் சுழற்சி ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பெண்களுக்கு தொப்பை வர வாய்ப்பு உள்ளது.

3. அடிக்கடி வலி நிவாரணி எடுத்து கொள்ளும் பெண்களுக்கு தொப்பை வர ஆரம்பிக்கும்.
புளி
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உரிய டயட் பிளான் வைத்து, அதன் படி உணவுகளை எடுத்து கொள்வதால் உடல் எடையை குறுகிய காலத்திற்குள் குறைக்கலாம். சாதாரணமாக உணவில் சேர்க்கப்படும் புளி வாதத்தன்மையை கூட்டும் என பலரும் கூறுவார்கள். மாறாக, குடம்புளி வாதத்தை அதிகரிக்காமல் உடலில் உள்ள உஷ்ணத்தை அதிகரிக்கும். இதனால் செல்களில் தங்கியிருக்கும் கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்.

குடம் புளி ரசம்
குடம்புளி ரசம் வைக்கும் போது தக்காளிக்கு பதிலாக குடம்புளியை சேர்க்கலாம். மிளகு, சீரகம், பூண்டு, மல்லி விதை பொடி, சுக்கு பொடி ஆகிய பொருட்களை போட்டு ரசம் வைக்கும் பொழுது, புளி கரைச்சலையும் சேர்த்து வைக்கலாம்.
இந்த ரசம் தினமும் குடிக்கும் பொழுது தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பு செல்களில் இருந்து கரையும். இதனால் நீங்கள் மீண்டும் சிலிம்மாக மாறலாம்.



