ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவை

தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்

தலைமுடி சிலருக்கு கொத்து கொத்தாக கொட்டும். அதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, ஹார்மோன் சமநிலையின்மை என பல காரணங்கள் உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி, தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை முறையாகக் கொடுக்காமல் இருப்பதும் மிக முக்கியக் காரணம்.

தலைமுடியை நீளமாகவும் உறுதியாகவும் வளர வைக்க அருமையான ஹேர் டோனரை ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும் | Homemade Rice Fenugreek Toner For Hair Growth

தேவையான பொருள்கள்

  1. அரிசி – 3 ஸ்பூன்
  2. வெந்தயம் – 1 ஸ்பூன்
  3. க்ரீன் டீ பேக் – 1
  4. எலுமிச்சை தோல் – 1

​செய்யும் முறை

முதலில் அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் 2 கப் அளவுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனுடன் க்ரீன் டீ பேக்கைப் போட்டு, எலுமிச்சை தோலையும் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டுக் கொள்ளுங்கள்.

தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும் | Homemade Rice Fenugreek Toner For Hair Growth

இந்த கலவையை குறைந்தது 4 மணி நேரமாவது அப்படியே ஊற விடுங்கள். இரவு முழுவதும் ஊற வைப்பது இன்னும் சிறந்த பலனைத் தரும். காலையில் இந்த கலவையை நன்றாகக் கலக்கி, தண்ணீரை மட்டும் தனியே வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது லேசான மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் நீர் தான் உங்களுடைய முடியை உறுதிப்படுத்தப் போகும் ஹேர் டோனர்.

இந்த டோனரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதை தலைமுடியின் வேர்க்கால்களுக்குள நன்கு உள்ளே செல்லுமாறு ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும்.

பின்பு முடி முழுவதும் ஸ்பிரே செய்துவிட்டு 5 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்யுங்கள்.

பின் ஒரு மணிநேரம் வரை அப்படியே வைத்திருந்து விட்டு, பின் தலையை அலசுங்கள். முடியை உலரவிட்ட பின் பாருங்கள் உங்கள் முடி பட்டுபோல மின்னும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இதைத் தொடர்ந்து செய்து வந்தால் சில வாரங்களிலே முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். முடி உறுதியானதாகவும் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker