அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்பு

கறிவேப்பிலை சாப்பிட்டாலும் முடி கொட்டும்.. ஆதாரத்தோடு விளக்கிய மருத்துவர்

“கருவேப்பிலை சாப்பிட்டால் கொத்து கொத்தாக முடி கொட்டும். கதைகளின் படி பலன்கள் இருந்திருந்தால் தலைமுடி உதிர்வு குறையணும் தானே..” என்பதற்கு மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

பொதுவாக நமது வீடுகளில் கறிவேப்பிலை சாப்பாட்டில் இருந்தால் அதனை தூக்கி வீசாமல் சாப்பிட வேண்டும் என வலியுறுத்துவார்கள். ஏனெனின் கறிவேப்பிலையில் அதிகமான ஊட்டசத்துக்கள் மற்றும் ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை.

மிக மோசமான முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்களுக்கு கறிவேப்பிலை சாப்பிட்டாலே உடனே நின்று விடும் என்ற கருத்து நமது சமூகத்தினர் மத்தியில் இருக்கிறது. அத்துடன் இரும்பு சத்து இருப்பதால் தலைமுடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும் என்பார்கள்.

கறிவேப்பிலை சாப்பிட்டாலும் முடி கொட்டும்.. ஆதாரத்தோடு விளக்கிய மருத்துவர் | Why Hair Falls After Eating Curry Leaves

கறிவேப்பிலையில் இப்படியான பலன்கள் இருப்பது உண்மையா? கறிவேப்பிலை போட்டால் தலைமுடி உதிர்வு குறையுமா? உள்ளிட்ட பல கேள்விகள் நமக்கு வந்திருக்கும். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், மருத்துவர் ஒருவர் கொடுத்த விளக்கம் இணையவாசிகளின் கவனத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கறிவேப்பிலையில் வைட்டமின்கள், மினரல்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே உள்ளது. அப்படியாயின், கறிவேப்பிலையில் உள்ள ஊட்டசத்துக்களின் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

100 கிராம் கறிவேப்பிலையில் 60-70 கலோரிகள் இருக்கின்றன.அவற்றில் பெருமளவு தண்ணீர்ச்சத்து இருக்கிறது. அதே போன்று கார்போஹைட்ரேட் – 20 கிராம் அளவும், புரதங்கள் – 4 கிராம் அளவும், நார்ச்சத்து – 2 முதல் 3 கிராம் வரையிலும் உள்ளது.

கறிவேப்பிலை சாப்பிட்டாலும் முடி கொட்டும்.. ஆதாரத்தோடு விளக்கிய மருத்துவர் | Why Hair Falls After Eating Curry Leaves

மேலும், வைட்டமின் சி, இரும்புச்சத்து இன்னும் பிற மினரல்கள் மில்லிகிராம் அளவுகளில் கிடைக்கிறது.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகமாகவே உள்ளது. உதாரணமாக, 100 கிராம் கறிவேப்பிலையில் நமக்கு தினசரி தேவையான வைட்டமின் ஏ அளவின் மூன்று மடங்கு அதிகமாகவே இருக்கும்.

கறிவேப்பிலை சாப்பிட்டாலும் முடி கொட்டும்.. ஆதாரத்தோடு விளக்கிய மருத்துவர் | Why Hair Falls After Eating Curry Leaves

அதே போன்று கால்சியம் சத்து தினசரிக்கு தேவையான அளவில் 80 சதவிகிதம் கிடைக்கும் மற்றும் உடலுக்குச் சிறிய அளவில் தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் 10 சதவீதம் கிடைக்கிறது.

கறிவேப்பிலை சாப்பிடும் ஒருவருக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால் அதனால் தலைமுடி உதிர்வு குறையும் என்றால் அது இல்லை. ஏனெனின் கறிவேப்பிலையில் உள்ள சில நுண்ணூட்டச்சத்துக்கள் முடிக்குத் தேவையானதான ஆரோக்கியம் கொடுத்தாலும், தலைமுடி உதிர்வை குறைக்காது. அதற்கான சான்றுகள் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை சாப்பிட்டாலும் முடி கொட்டும்.. ஆதாரத்தோடு விளக்கிய மருத்துவர் | Why Hair Falls After Eating Curry Leaves

வழக்கமான செடிகளில் காணப்படும் கார்பசோல் எனப்படும் வேதிப்பொருள் கறிவேப்பிலையில் உள்ளது. இந்த வேதிப்பொருள் மிதமான அளவில் கொலஸ்டிரால், ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆய்வகங்களில் இருந்து வெளியானதை தவிர, மனிதர்களை வைத்து செய்யப்பட்டதாக சான்றுகள் இல்லை.

கறிவேப்பிலை சாப்பிட்டாலும் முடி கொட்டும்.. ஆதாரத்தோடு விளக்கிய மருத்துவர் | Why Hair Falls After Eating Curry Leaves

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker