அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்புதியவைமருத்துவம்

30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்

பெரும்பாலானவவர்கள் தங்களின் நாளை ஒரு கப் பிளாக் காபியுடன் தொடங்குகிறார்கள். இந்த பழக்கம் 30  நாட்களுக்கு தினசரி தொடர்ந்தால், பிறகு உங்கள் உடலில் என்ன மாற்றம் நிகழும் என போதாவது யோசித்திருக்கிறீர்களா

தினசரி பிளாக் காபி குடிப்பதால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கிடைக்கின்றது. ஆனால் அதிகப்படியான காஃபின் நுகர்வு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள் | What Will Happen Drinking Black Coffee Daily

தினசரி  30 நாட்களுக்கு  பிளாக் காபி குடித்தால் உடலில் நிகழும் சாதக மற்றும் பாதக விளைவுகள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலையில் காபி அல்லது டீ குடித்தே ஆகவேண்டும் என்று சொல்பவர்களுக்கு பிளாக் காபி சிறந்த ஒரு பானமாக இருக்கும்.

30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள் | What Will Happen Drinking Black Coffee Daily

பிளாக் காபியில் காணப்படும் காஃபின், மூளையின் செயல்பாட்டைத் தூண்டி, கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

பிளாக் காபி கல்லீரல் நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுவதாகவும்  ஆய்வுகளின் சில ஆய்வறிக்கைகள் காணப்படுகின்றது.

30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள் | What Will Happen Drinking Black Coffee Daily

காஃபின் அடினோசின் ஏற்பிகளைத் தடுப்பதன் மூலமும், டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும் செயல்படுகிறது, இது மத்திய நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது.

இது அட்ரினலின் அளவையும் அதிகரிக்கிறது, இது உடலை கடின உழைப்புக்குத் தயார்படுத்துகிறது. கருப்பு காபி குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பெருமளவில் துரிதப்படுத்தும், இது கொழுப்பை எரிப்பதில் ஆற்றல் காட்டுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள் | What Will Happen Drinking Black Coffee Daily

உடல் எடையை குறைக்க வேண்டும் என போராடுபவர்களுக்கு பிளாக் காபி சிறந்த தெரிவாக இருக்கும்.

காபி ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக திகழ்கின்றது, இது செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் பெரிதும் துணைபுரிகின்றது.

மேலும் கருப்பு காபி, ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது, இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்துப் போராடுவதில் ஆற்றல் காட்டுவதுடன் அதில் காணப்படும் சில   பொருட்கள், நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள் | What Will Happen Drinking Black Coffee Daily

காபி இயல்பாகவே டோபமைன் அளவை உயர்த்துவதன் காரணமாக  உங்களை நன்றாக உணர வைக்கும், ஆனால் அதிகப்படியான காபின் நுகர்வு உங்களை பதற்றத்துக்கு ஆளாக்க கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள் | What Will Happen Drinking Black Coffee Daily

அதிக அளவு பிளாக் காபி குடிப்பதால், பதட்டம், தூக்கமின்மை, நடுக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட  அதிக வாய்ப்பு காணப்படுவதால், தூக்கத்தில் இது தாக்கம் செலுத்தாமல் இருப்பதற்கு படுக்கைக்கு முன் குறைந்தது ஆறு மணி நேரம் காபி குடிக்காமல் இருப்பது சிறப்பு.

மேலும் சிலருக்கு தொடர்ச்சியான  காபி குடிப்பது வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக வெறும் வயிற்றில் குடிக்கும்போது செரிமான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.அது குறித்து கவனம் செலுத்தினால் கருப்பு காபியின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker