இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
ஆரோக்கிய பானமாக அனைவருக்கும் பிடித்த இளநீர் வாரத்திற்கு எத்தனை முறை அருந்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வெயில் காலங்கள் என்று வந்துவிட்டாலே தண்ணீர் சத்து அதிகமாக காய்கறிகள், பழங்கள், பானங்கள் என உண்பதற்கு தான் பெரும்பாலான நபர்கள் விரும்புவார்கள்.
அதிலும் இளநீர் வெயில் காலங்கள் மட்டுமின்றி அனைத்து பருவகாலங்களிலும் மக்கள் அருந்துகின்றனர். ஏனெனில் இதில் உள்ள மினரல்கள் உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.
வெப்ப காலங்களில் உடம்பில் வெப்பத்தை தனிக்கக்கூடிய பானமான இளநீர், உடம்பிற்கு தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றது.
சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கவும், செரிமானத்திற்கு உதவவும், ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
வாரத்திற்கு 3 முதல் 4 முறை இளநீர் அருந்துவது போதுமானதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் ஒருமுறை குடிப்பதற்கு சுமார் 150 முதல் 200 மில்லி லிட்டர் இளநீர் போதுமானது. காலை நேரங்கள் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு அருந்துவது சிறந்தது.
“இது வயிற்றுக்கு எளிதானது மற்றும் நீரேற்றத்தைத் தொடங்க உதவுகிறது. இரவில் தாமதமாகக் குடிப்பதைத் தவிர்க்கவும், குறிப்பாக உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
உயர்த்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழப்பு அபாயத்தில் உள்ளவர்களுக்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நல்ல தேர்வாக அமைகின்றது.
ஆனால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் கட்டுப்படுத்தும் உணவினை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் நீரிழிவு நோயாளிகளும் மிதமான அளவில் அருந்த வேண்டுமாம். ஏனெனில் இயற்கை சர்க்கரைகள் உள்ளதால் அளவாக எடுத்துக் கொள்ளவும்.