ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்பு

வேகவைத்த முட்டை vs ஆம்லெட்… எது ஆரோக்கியமானதுன்னு தெரியுமா?

பொதுவாகவே முட்டை குறித்து ஆரோக்கிய பலன்களை கணிப்பதற்கு முன்பு சுவையின் அடிப்படையில் பார்த்தோமானால், முட்டையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இறைச்சி உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பவர்கள் கூட முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் புரத்தின் மிகச்சிறந்த மூலமாக முட்டை அடையாளப்படுத்தப்படுகின்றது.

வேகவைத்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானதுன்னு தெரியுமா? | Boiled Egg Vs Omelette Which Has More Nutrition

பொதுவாக அவித்த முட்டை, ஆம்லெட்டை விட ஆரோக்கியமானது என்று கருதப்படுகிறது. அவித்த முட்டையில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

இருப்பினும், ஆம்லெட் தயாரிக்கும் முறையைப் பொறுத்து அதன் ஆரோக்கியம் மாறுபடும். எண்ணெய் மற்றும் இதர பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தினால், அது அவித்த முட்டையை விட குறைவான ஆரோக்கியமானதாக இருக்கலாம்.

வேகவைத்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானதுன்னு தெரியுமா? | Boiled Egg Vs Omelette Which Has More Nutrition

அவித்த முட்டை மற்றும் ஆம் லெட் இவை இரண்டில் உடல் ஆரோக்கியத்துக்கு எது மிகவும் சிறந்தது என்ற குழப்பம் பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகின்றது. இது குறித்து தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

வேகவைத்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானதுன்னு தெரியுமா? | Boiled Egg Vs Omelette Which Has More Nutrition

அவித்த முட்டையில் ஊட்டச்சத்துக்கள் நேரடியாக கிடைக்கின்றன. முட்டையை அவிப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன் உடலுக்கு முழுமையாக கிடைக்கின்றது.

மேலும் முட்டையை அவித்து சாப்பிடுவதால், விட்டமின் பி12, டி மற்றும் ரிபோஃபிளேவின் ஆகிய சத்துக்கள் செரிவாக கிடைககூடியதாக இருக்கும்.

ஆம்லெட்

வேகவைத்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானதுன்னு தெரியுமா? | Boiled Egg Vs Omelette Which Has More Nutrition

சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சுவை மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் சேர்த்து பெற வேண்டும் என்று விரும்பினால், ஆம்லெட் சிறந்த தெரிவாக இருக்கின்றது.

ஆம்லெட் செய்யும் பொது வெண்ணெய், காய்கறிகள் மற்றும் இறைச்சி துண்டுகளையும் சேர்த்துக் கொள்வதால் சுவையையும் அதிகரித்து அதே சமயம் ஆரோக்கியத்தையும் பெறக்கூடியதாக இருக்கும். ஆம்லெட் செய்தாலும் புரதம் நிறைவாக கிடைக்கும்.

ஆனால் இதை சமைப்பதற்கு நாம் பயன்படுத்தும் வெண்ணெய் அல்லது எண்ணெய் மூலமாக ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலில் சேர அதிக வாய்ப்புள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதில் சேர்க்கப்படும் இதர மூலப் பொருட்களினால் முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்து அளவுகளில் மாற்றங்கள் ஏற்படவும் அதிக  வாய்ப்பு காணப்படுகின்றது.

வேகவைத்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானதுன்னு தெரியுமா? | Boiled Egg Vs Omelette Which Has More Nutrition

ஒப்பீட்டு ரீதியில் பார்த்தால் அவித்த முட்டைதான் மிகவும் சிறந்ததாக அறியப்படுகின்றது. காரணம்  புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவித்த முட்டையில் அதிகம் பாதுகாக்கப்படுகின்றது.

ஆனால் ஆம்லெட்டில் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும்  அதில் கலோரிகள், கொழுப்புகள் போன்றவையும் அதிகம் சேருவதால், இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பாதக விளைவுகளையே கொடுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker