ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

சிக்கன் 65-யை மிஞ்சும் பலாக்காய் 65! வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

சிக்கன் 65-யை மிஞ்சும் பலாக்காய் 65 வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக மாலை வேலை வந்துவிட்டாலே பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்பி விடுவார்கள். அவ்வாறு வீட்டிற்கு வரும் குழந்தைகள் சாதம் போன்ற உணவுகளை விரும்புவதில்லை.

அதற்கு மாறாக தனக்கு சுவையானதாகவும், சூடானதாகவும் இருக்கும்  ஸ்நாக்ஸ் தான் விரும்புகின்றனர். அவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கனைப் போன்றே பலாக்காயில் 65 எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பலாக்காய் – 1
தண்ணீர் – 200 மிலி
காஷ்மீரி வரமிளகாய் – 1 கைப்பிடி
சமையல் வினிகர் – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை – 1
உப்பு – சுவைக்கேற்ப
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சிக்கன் 65-யை மிஞ்சும் பலாக்காய் 65! வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி? | How To Make Jackfruit 65 Overtake Chicken 65

செய்முறை

உணவு செய்முறைகள்

பலாக்காயை முதலில் சிறுசிறு துண்டுகளாக சிக்கன் போன்று வெட்டி பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

பின்பு தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் 200 மி.லி தண்ணீரை ஊற்றி, வரமிளகாய் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்.

பின்பு மிக்ஸி ஜாரில் வேக வைத்துள்ள மிளகாய், 3 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து கிண்ணம் ஒன்றில் எடுத்து வைக்கவும்.

சிக்கன் 65-யை மிஞ்சும் பலாக்காய் 65! வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி? | How To Make Jackfruit 65 Overtake Chicken 65

அகலமான பாத்திரம் ஒன்றினை எடுத்துக் கொண்டு அதில் வேக வைத்த பலாக்காய், அதனுடன் 1 எலுமிச்சை சாறு, தேவைக்கு ஏற்ப உப்பு சேர்ந்து கலந்து கொள்ளவும்.

இதில் சோள மாவு, அரிவி மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊற வைத்துள்ள பலாக்காயை உதிர்த்து சேர்த்து, ப்ரை செய்து எடுத்தால், சுவையான பலாக்காய் 65 தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker