சூடான சாதத்திற்கு கிராமத்து பாணியில் புளிக்குழம்பு: இந்த முறையில் செய்ங்க
வீட்டில் எத்தனை வகைவகையாக உணவு செய்தாலும் பாரம்பரிய முறையில் உணவு செய்து சாப்பிடும் சுவையே வேறு. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் துரித உணவுகளுக்கே அடிமையாகி விட்டனர்.
இந்த நிலையில் நமது வீட்டில் அம்மா மற்றும் பாட்டிக்கள் செய்யும் பாரம்பரிய உணவுகள் எப்பவும் சுவை தான். அப்படி ஒரு உணவான புளிக்குழம்பு தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.
இந்த புளிக்கும்பு கிராமத்து பாணியில் செய்யப்படுவதாகும். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். வாங்கள் இதை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பெரிய நெல்லிக்காய் அளவு உள்ள புளி
- 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
- அரை டீஸ்பூன் கடுகு
- அரை டீஸ்பூன் பெருங்காயம்
- 3 வற மிளகாய்
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 2 பெரிய வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 2 தக்காளி அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
- மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- 2 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
புளி குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு உள்ள புளியை நிறைய தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.பின்னர் இதை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த புளியை தனியே எடத்து வைக்க வேண்டும். இப்பொழுது வெள்ளைப் பூண்டை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நல்லெண்ணெய் சூடானதும் மிதமான தீயில் கடுகு, பெருங்காயம், வற மிளகாய், வெந்தயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்கு வதக்க வேண்டும்.
இவை ஓரளவிற்கு வதங்கி பூண்டின் பச்சை வாசனை போனதும் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்க வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பின்னர் இதில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்ற வேண்டும். பின்னர் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும்.
இறுதியாக ஒரு கைப்பிடி அளவுள்ள கறிவேப்பிலையை தூவி அடுப்பை அணைக்க வேண்டும். இப்போது சூடான சுவையான புளிக்குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் திருப்தியாக இருக்கும்.