ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

என்றும் இளமையுடன் ஜொலிக்க வைக்கும் பீட்ரூட் சீரம்- தினமும் போடலாமா..

சிலர் எவ்வளவு நிறமாக இருந்தாலும் அவர்களின் முகத்தில் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி இருக்காது.

அதே போன்று எவ்வளவு வயதானாலும் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தாமல் இளமையாக இருக்க சில டிப்ஸ்கள் உள்ளன.

தற்போது வளர்ந்து வரும் சமூகத்தில் முக அழகை பராமரிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரும பராமரிப்பு ஆகிய இரண்டையும் சரி வர செய்து வர வேண்டும்.

என்றும் இளமையுடன் ஜொலிக்க வைக்கும் பீட்ரூட் சீரம்- தினமும் போடலாமா? | Beetroot Serum Benefits In Tamilஅந்த வகையில் இளமையை எப்போதும் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு பீட்ரூட் சீரம் பயன்படுத்தலாம். பீட்ரூட் சீரம் எப்படி தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு முகத்தில் உற்பத்தியாக கூடிய கொலாஜின் குறையாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் முகச்சுருக்கம் எதுவும் ஏற்படாமல் அழகாக இருக்கும்.

அத்துடன் முகத்திற்கு தேவையான ஆன்ட்டி ஆக்சைடு கிடைத்துவிட்டலாலும் பொலிவு கிடைத்து விடும். இதனை சரியாக பின்பற்ற வந்தால் முக அழகு நிரந்தரமாக இருக்கும்.

என்றும் இளமையுடன் ஜொலிக்க வைக்கும் பீட்ரூட் சீரம்- தினமும் போடலாமா? | Beetroot Serum Benefits In Tamil

மேற்குறிப்பிட்ட அனைத்து சத்துக்களும் பீட்ரூட்டிற்கு உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். இவற்றையெல்லாம் பீட்ரூட் சீரம் இலகுவாக கொடுக்கிறது. செயற்கையாக வரும் சீரத்தை விட பீட்ரூட் சீரம் ஏகப்பட்ட பலன்களை தருகிறது என்றும் பாவணையாளர்கள் கூறுகிறார்கள்.

பீட்ரூட், கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து கொள்ளவும். அதில், மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல், இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பீட்ரூட் சாறு, பத்து சொட்டு தேங்காய் எண்ணெய் இருக்க வேண்டும். விருப்பம் இருந்தால் வைட்டமின் ஈ கேப்சூல் ஒன்றையும் சேர்க்கலாம்.

என்றும் இளமையுடன் ஜொலிக்க வைக்கும் பீட்ரூட் சீரம்- தினமும் போடலாமா? | Beetroot Serum Benefits In Tamil

ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து விட்டால் சீரம் பதத்திற்கு வந்து விடும். தினமும் படுக்கைக்கு செல்லும் முன்னர், இதனை தடவி மசாஜ் செய்து விட்டு உறங்க வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து வழக்கமாக நாம் செய்யும் வேலைகளை செய்யலாம். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் முகச்சுருக்கங்கள் நீங்கி, அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker