குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை எப்படி பாதுகாப்பது.. வீட்டு வைத்தியம்
சருமம் எப்போதும் அழகாக இருக்கத்தான் எல்லோருக்கும் ஆசை, தற்போது நவம்பர் மாதம் ஆரம்பமாகிறது. இதனால் சருமம் அதிகமாக வறண்டு போக வாய்ப்பு உள்ளது.
தோல் வறட்சி நிலையை அடையும் போது அது நமது வயதை அதிகமாக காட்டும், தோல் மிகவும் மெல்லியதாகி நீர்ச்சத்தை இழக்கும்.
இதற்கு நாம் வீட்டிலேயே சில வழிமுறைகளை செய்வது நன்மையை தரும்.
சருமத்தை குளிர்காலத்திலும் மென்மையாக மாற்ற விரும்பினால் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
ரோஸ் வாட்டர் என்பது காய்ச்சி வடிகட்டிய ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் நறுமண திரவமாகும்.
இந்த பதிவில் ரோஸ் வாட்டர் கொண்டு வறண்ட சருமத்தை எப்படி மென்மையாக்கலாம் என்பதை பார்க்கலாம்.
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு சிறந்த ஈரப்பதத்தை கொடுக்கக்கூடியது. இதை காலையில் எழுந்தவுடன் முகத்தில் தேய்த்து வந்தால் சருமத்திற்கு மென்மையான, மிருதுவான அமைப்பை வழங்குகிறது.
ரோஸ் வாட்டரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் வெயிலால் ஏற்படும் சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை இல்லாமல் செய்யும். முகம் வீங்கி இருந்தால் வீக்கமடைந்த பகுதிகளை ஆற்றுவதற்கு இந்த ரோஸ் வாட்டர் பயன்படும்.
சருமத்தில் இறந்த கலங்கள் இருந்தால் அதை அகற்ற இந்த ரோஸ் வாட்டர் உதவுகிறது. இது தவிர சருமத்தில் புதிய செல்கள் மீளுருவாக்கம் செய்வதை ஊக்குவிக்கிறது.
இதை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தும் போது ஒரு மென்மையான, சுத்திகரிக்கப்பட்ட தோற்றத்தை அடைய உதவும்.
ரோஸ் வாட்டர் முகத்தின் சருமத்தை பளபளப்பாகவும், பொலிவுடனும் வைத்திருக்க பன்னீர் எனப்படும் ரோஸ் வாட்டர் மிகவும் உதவுகிறது.
சருமம் மற்றும் முகத்தை அழகாக்க ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது முகலாயர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் முறை ஆகும்.
இது தவிர சருமத்தை வெண்மையாக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும் பண்புகளும் ரோஸ் வாட்டரில் அதிகம் இருக்கின்றன. ரோஸ் வாட்டர் முகப்பரு பிரச்னையை குறைக்கவும் உதவுகிறது.