காலிஃப்ளவர் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா..
ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவர் அடிக்கடி ஏன் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் காலிஃப்ளவர், பருவ காலங்களின் உண்பதற்கு ஏற்ற காய்கறி ஆகும்.
இதனை எண்ணெய்யில் பொரித்து உண்ணாமல் கூட்டு மற்றும் குழம்பாக வைத்து சாப்பிட்டால், அதிக சத்துக்கள் கிடைப்பதுடன், எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
இதில் வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின்-கே ஆகிய சத்துக்களும் பல்வேறு தாதுக்களும் உள்ளன. காலிஃபிளவரில் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவையும் உள்ளன.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் காலிஃப்ளவர் முக்கிய உதவியாக இருக்கின்றது. மூளை செயல்பாட்டிற்கும் நரம்பு மண்டலத்திற்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
தினமும் இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சில உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் இடைவெளி விட்டு சாப்பிடவும்.
மேலும் இதனை நன்றாக வேக வைத்து பின்னர் தான் சாப்பிட வேண்டுமாம்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றினை எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதே போன்று இதில் அதிகப்படியான கால்சியம் இருப்பதால் சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களும் அளவோடு உண்பது நல்லது.
காலிஃபிளவர் உண்பதால் T3, T4 ஹார்மோன்களின் அளவுகளை சமநிலையை குலைக்கும். நாள்தோறும் சாப்பிட்டால் வாயு தொல்லை, அசிடிட்டி பிரச்சனைகள் உண்டாகும்.
ஏற்கனவே பித்தப்பை அல்லது சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் காலிஃபிளவர் உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.