புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்… இப்படி செய்து பாருங்க
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
சௌசௌ காயில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் இதில் காணப்படுகின்றது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட சௌ சௌ காயை கொண்டு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையான சுவையில் சௌ சௌ பொரியலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 தே.கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
கடலைப் பருப்பு – 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
சௌ சௌ – 1/2 கிலோ (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
தண்ணீர் – 1/4 ப்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
அரைப்பதற்கு தேவையானவை
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் சௌ சௌ காயை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கண்ணாடி பதத்தில் வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய சௌ சௌ காயை சேர்த்து, 1 நிமிடம் கிளறிவிட்டு பின் அதில் 1/4 கப் தண்ணீ்ர் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
அதற்கிடையில் ஒரு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை வேகவைத்த காயுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு நன்றாக வேகவிட வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த சௌ சௌ பொரியல்