காரைக்குடி பாணியில் அசத்தல் தக்காளி சட்னி… இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே இட்லி தோசைக்கு பெரும்பாலானவர்கனின் தெரிவு தக்காளி சட்னியாகத்தான் இருக்கும்.
அப்படி தக்காளி சட்னி செய்யும்போது வழக்கமான முறையில் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் காரைக்குடி பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பழுத்த நாட்டு தக்காளி – 4
பெரிய வெங்காயம் – 1
வரமிளகாய் – 3
காஷ்மீர் மிளகாய் – 3
பூண்டு – 5 பல்
புளி – சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடலைப் பருப்பு – 4 தே.கரண்டி
நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூமானதும், கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இந்த கலவையை நன்கு குளிரவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய மிளகாய், பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை சேர்து கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம், பூண்டு கலவையையும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் அவ்வளவு தான் காரைக்குடி தக்காளி சட்னி தயார்.