உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி… எப்படி செய்வது..

பொதுவாகவே ஞாயிற்று கிழமை பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், அனைவரும் எழுந்திருப்தில் ஆரம்பித்து எல்லா வேலைகளையும் சற்று தாமதமாக தான் செய்வார்கள்.

மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும் இந்த நாளிலும் இல்லத்தரசிகளுக்கு மட்டும் மதிய உணவு தயாரிக்கும் வாடிக்கையில் மாற்றம் ஏற்படுவது அரிது.

Sunday special: வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது? | How To Make A Chicken Gravy Within 15 Minutes

அப்படி தாமதமாக சமையலை  ஆரம்பித்தாலும் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் கிரேவியை வெறும் 15 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Sunday special: வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது? | How To Make A Chicken Gravy Within 15 Minutes

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 மேசைக்கரண்டி

சிக்கன் – 1 கிலோ

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி

கறி மசாலா தூள் – 1 1/2 மேசைக்கரண்டி

தண்ணீர் – 1/4 டம்ளர் உப்பு – 1 தே.கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

Sunday special: வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது? | How To Make A Chicken Gravy Within 15 Minutesமுதலில் சிக்கனை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிளய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Sunday special: வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது? | How To Make A Chicken Gravy Within 15 Minutes

பின்னர் அதனுடன்  தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு,  2 நிமிடங்கள் வரையில் நன்றாக வேக வைக்க வேண்டும்.

பின்னர் அதனுமன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கறி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1 டீஸ்பூன் உப்பு மற்றும் தேவையாக அளவு தண்ணீரட் சேர்த்து 7 தொடக்கம் 10 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.

Sunday special: வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது? | How To Make A Chicken Gravy Within 15 Minutes

கடையில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், அவ்வளவு தான் வெறும் 15 நிமிடங்களில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker