முகம்-மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை வெறும் 15 நிமிடத்தில் நீக்கணுமா.. இதை செய்தாலே போதும்
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காக அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிடுவார்கள்.
அதில் பெண்களுக்கு அலாதி இன்பம் என்றே கூற வேண்டும். தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு மற்றும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களின் பாவனை, அதிகரித்த மன அழுத்தம் போன்ற காரணங்களால் சருமம் அடிக்கடி பொலிலிழந்து காணப்படும்.
இவ்வாறு சருமத்தின் அழகை கெடுக்கும் முக்கிய விடயங்களுள் ஒன்று தான் முகம் மற்றும் மூக்கு பகுதியில் ஏற்படும் கரும்புள்ளிகள். அதனை வீட்டில் கடைக்கக்கூடிய இயற்கை பொருட்களை கொண்டு எவ்வாறு எளிமையாக நீக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் இயற்கையாகவே முகத்தை வெண்மையாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் -சி சருமத்தை ப்ளீச் செய்யும் சிறந்த மூலப்பொருளாகும்.
எனவே எலுமிச்சம்பழத்தோலைக் கொண்டு கரும்புள்ளிகளை ஸ்க்ரப் செய்தல் கரும்புள்ளிகள் விரைவில் மறையும். கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் எலுமிச்சை சாறு, தேன், சர்க்கரை அல்லது முட்டையுடன் கலந்து ஸ்கரப் செய்து 15 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுவதால் உடனடியாக கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொழிவு பெறும்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோலும் மிகவும் பயனுள்ள ஒரு சரும பாதுகாப்பு மூலப்பொருளாக பார்க்ப்படுகின்றது. ஆரஞ்சு தோலை நன்றாக உலர்த்தி பொடி செய்து, சிறிது பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் தயாரித்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரையில் உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் கரும்புள்ளிகளை நீக்கி, முகம் இயற்கையாகவே பளபளக்கும்.
பேக்கிங் சோடா
பொதுவாவே அனைவரின் சமையலறையிலும் பேக்கிங் சோடா நிச்சயம் இருக்கும். இந்த சமையலறை பொருள் பொதுவாக தோல் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒரு சிற்றிகை அளவு பேக்கிங் சோடாவை எடுத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் லேசாக ஸ்க்ரப் செய்து 15 நிமிடங்கள் வரையில் அப்பயே விட்டு பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதால் உடனடியாக மாற்றத்தை பார்க்கலாம்.
முட்டை
கரும்புள்ளிகளை நீக்குவதில் முட்டையின் வெள்ளை கரு சிறப்பாக செயற்படுகின்றது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் முகம் இயற்கை பொலிவு பெறுவதை கண்கூடாக பார்க்கலாம்.
பப்பாளி
கரும்புள்ளிகளை உடனடியாக நீக்குவதில் மற்றுமொரு சிறந்த வீட்டு வைத்தியம் தான் பப்பாளி பேஸ்பேக்.முதலில் பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து அதில் தேன் அல்லது பால் சேர்த்து பசை போல் நன்கு குழைத்துக்கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.
தயிர்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.