ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

சிக்கன் பாப்கோர்ன் சாப்பிட்டு இருக்கீங்களா… ரெசிபி இதோ!

பாப்கோர்ன் என்றால் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். இதை வித்தியாசமான சுவைகளில் சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடும் போது குழந்தைகள் பெரியவர்கள் என எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சிக்கனை வைத்து நாம் பல ரெசிபிகளை செய்வது வழக்கம். ஆனால் புது விதமாக சிக்கன் ரெசிபியில் பாப்கோர்ன் செய்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இதை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் உண்ண கொடுக்கலாம்.

மாலை தேனீர் குடிக்கும் நேரங்களில் நாம் ஸ்னாக்ஸ் வாங்குவது வழக்கம். அப்படி கடைகளில் ஆரோக்கியம் அற்றதை வாங்கி உண்பதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிக்கன் பாப்கோர்ன் சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ இருக்கு! | Evening Snaks Crispy Chicken Popcorn Recipe Tamil

தேவையான பொருட்கள்

  • எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
  • பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • பிரட் – 4
  • முட்டை – 1
  • பால் – 1 டேபிள் ஸ்பூன்
  • மைதா – 1/2 கப்

செய்முறை

முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிரட் துண்டுகளை பொன்னிறத்தில் டோஸ்ட் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இதைத்த இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிக்கன் பாப்கோர்ன் சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ இருக்கு! | Evening Snaks Crispy Chicken Popcorn Recipe Tamilஇதனுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கி அடித்துக்கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றி கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் பாப்கோர்ன் தயார்.

சிக்கன் பாப்கோர்ன் சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ இருக்கு! | Evening Snaks Crispy Chicken Popcorn Recipe Tamil

இந்த பாப்கோர்ன் ரெசிபியை நீங்கள் வீட்டில் உள்ளவார்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker