பேன் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டுமா.. இதை மட்டும் செய்தால் போதும்
தலையில் பேன் தொல்லையில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் ஆகும்.
பொதுவாக பேன் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியதாகும். இவை மாதம் ஒன்றிற்கு இரண்டாயிரம் வரை முட்டையிடுவதால், மிகவும் வேகமாக தலையில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.
குறிப்பாக பெண்களில் தலையில் பேன் மிக எளிதில் பரவி வரும் பேன் தொல்லையினால், மொட்டை அடிக்கவோ… முடியை வெட்டவோ வேண்டும்.
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனியாக சீப்புகளை பயன்படுத்துவதுடன், சீவிய பின்பு சீப்பில் உள்ள அழுக்குகளை உடனே கழுவி நீக்கிவிட வேண்டும்.
தலையணைகளும் தனித்தனியாகவே பயன்படுத்த வேண்டும். தலையணை உறைகளை அவ்வப்போது வெந்நீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யுடன் பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்.
தேங்காய் எண்ணெய்யை சூடு படுத்தி அதில் சிறிதளவு வேப்பிலை சாறு மற்றும் கற்றாழையை போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெய் தலைக்கு தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்.