பாகற்காய் சாப்பிட்டால் தப்பி தவறி இந்த பொருட்களை வாயில் கூட வைக்காதீங்க- ஆபத்து நிச்சயம்
மற்ற காய்கறிகளை விட பாகற்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறியாக பார்க்கப்படுகின்றது.
இந்த காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை கொடுக்கிறது.
எவ்வளவு பலன்கள் இருந்தாலும் பாகற்காயை குறிப்பிட்ட சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்த வகையில் பாகற்காயுடன் என்னென்ன பொருட்களை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பாகற்காய் சாப்பிட பின்னர் மறந்தும் கூட பால் குடிக்கக் கூடாது. இது வயிற்றில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். பாகற்காய் சாப்பிட்ட பின்னர் பால் குடித்தால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படும்.
2. பாகற்காய் சாப்பிடும் போது முள்ளங்கி சாப்பிடக் கூடாது. ஏனெனின் முள்ளங்கி மற்றும் பாகற்காயின் தாக்கம் வித்தியாசமானது இருக்கும். இது தொண்டையின் அமில தன்மை மற்றும் சளிபோன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். முள்ளங்கி மாத்திரம் அல்ல அதனுடன் தொடர்புப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
3. சிலர் உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படியான பழக்கம் கொண்டவர்கள் ஒருபோதும் பாகற்காய் சாப்பிட்ட பின்னர் தயிர் சாப்பிடக் கூடாது. ஏனெனின் இது வயிற்றில் பலவிதமான நோய்களை உண்டு பண்ணும்.
4. கோடைகாலங்களில் அதிகளவு விற்பனையாகும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. இதனை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடும் போது தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.