நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் பொரியல்…இப்படி ஒரு முறை செய்து பாருங்க
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்து.
மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க வெண்டைக்காய் பெரிதும் துணைப்புரிகின்றது. இருப்பினும் அதன் வளவளப்பு தன்மை காரணமாக பெரும்பாலானவர்கள் அதனை விரும்புவது கிடையாது.
வளவளப்பு தன்மை கொஞ்சமும் இல்லாமல் அட்டகாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 15
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
கடலை மாவு – 1 தே.கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 (மெல்லியதாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 3/4 தே.கரண்டி
மல்லித் தூள் – 1 தே.கரண்டி
தண்ணீர் – 1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின்னர், சுத்ததமான பருத்தி துணியால் துடைத்து மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெண்டைக்காயுடன் மஞ்சள் தூள், கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த வெண்டைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, சிறிதளவு நீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றான வதக்க வேண்டும்.
இறுதியாக பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு ஒருசேர வதக்கி இறக்கினால், அசத்தல் சுவையில் வெண்டைக்காய் பொரியல் தயார்.