தோல் எப்போதும் பிரகாசமாக இருக்க வேண்டுமா.. இப்படி செய்திடுங்கள்
சருமம் எப்போதும் பொலிவாக இருப்பதற்கு நாம் பல உத்திகளை கையாள்கின்றோம். இதே போல தான் இன்று பிரைட்னிங் மில்க் டோனர் எப்படி செய்யலாம் அதனால் சருமத்திற்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மற்றைய பொருட்களை விட பாலில் லாக்டிக் எனும் பதார்ததம் காணப்படுகின்றது. இது சருமத்தை எக்ஸ்ஃபாலியேட் செய்ய உதவுகிறது, மேலும் செல்களின் சுழற்சியை ஊக்குவிக்கிறது, இதன் விளைவாக மென்மையான, அதிக பொலிவான நிறம் கிடைக்கும்.
இதன் காரணமாக தான் சருமப்பராமரிப்பில் நாம் பாலை சோத்துக் கொள்வது மிகவும் முக்கியம். பால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்களால் நிரம்பிய பால் ஈரப்பதமூட்டும், ஊட்டமளிக்கும் மற்றும் எக்ஸ்ஃபாலியேட்டிங் பண்புகளைக் கொண்டுள்ள பதார்த்தம்.
இதனால் சருமத்தின் நிறம் பராமரிக்கப்படுகிறது. செல்களின் சழற்றியை ஊக்குவிக்கும். முகத்தை தண்ணீர் கொண்டு கழுவியவுடன் ஒரு காட்டன் பால் அல்லது பேடை பாலில் நனைத்து, உங்கள் முகத்தில் மெதுவாக தடவவும்.
இதன் பின்னர் பால் உலர்ந்ததும் அதை கழுவி விட்டு மாய்ஸ்சரைசர் தடவுவதால் சருமத்தில் ஹைட்ரேஷனை தக்கவைக்க உதவும். சருமத்தில் உள்ள அழுக்கு எண்ணெய் பிசுப்பு தன்மையை இந்த பால் இல்லாமல் செய்யும்.
சருமத்திற்கு பாலை பயன்படுத்துவதால் புத்துணர்ச்சியுடனும் நீரேற்றத்துடனும் உணர உதவும். இது தவிர சருமம் அழகாகவு பொலிவாகவும் இருக்க இன்னும் சில உத்திகள் காணப்படுகின்றது.
தக்காளியை தோலுரித்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் போதும் எண்ணெய் சருமமின்றி முகம் பளபளப்புடன் இருக்கும்.
முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் மற்றும் முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க பப்பாளியையும் உபயோகிக்கலாம். இந்த உத்திகள் சரும அழகில் முக்கி இடம் வகிக்கின்றன.