காரசாரமான சிக்கன் சூப் வீட்டிலேயே எப்படி செய்வது..
பொதுவாகவே சூப் குடிப்பது அனைவருக்மே பிடித்தமான விடயமாக இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர்காலம் என்றால் சூப் குடிப்பது அலாதி இன்பமாக இருக்கும்.
இனிமேல் காரசாரமான சிக்கன் சூப் குடிக்க கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அட்டசாகமாக சுவையில் சிக்கன் சூப்பை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோழிக்கறி (எலும்புடன்) – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சீரகத்தூள் – 1 தே.கரண்டி
மிளகுத்தூள் – 1 தே.கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 தே.கரண்டி
தனியாத்தூள் – 1 தே.கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தே.கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்றாக கருவி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்வை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைக்க வேண்டும்.
அதனையடுத்து அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதில் மஞ்சத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் காரத்தன்மை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்றாக கிளறி விட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுமார் 5 -6 விசில் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
பின்னர் குக்கரை இறக்கி விசில் போகும் வரையில் விட்டு ,இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறினால் அட்டகாசமான சுவையில் காரசாரமான சிக்கன் சூப் தயார்.