வீடே மணமணக்கும் சிக்கன் கிரேவி ஒரு முறை கிராமத்து ஸ்டைலில் செய்து பாருங்க!
சிக்கன் கிரேவி என்பது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையில் செய்வார்கள். இதன் சுவையே வித்தியாசமாக இருக்கும். இந்த கிரேவி சுடு சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு வைத்து சேர்த்து சாப்பிலாம்.
அந்த வகையில் பல மசாலா பொருட்களை அரைத்து கிராமத்து ஸ்டைலில் எப்படி சிக்கன் கிரேவி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தேவையானவை
- மிளகு – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- அன்னாசிப்பூ – 1
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 3
- பட்டை – 3 துண்டு
- சின்ன வெங்காயம் – 5
- தேங்காய் – 1/2 கப்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கிராவிக்கு தேவையானவை
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – 1 கொத்து
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- தண்ணீர் – தேவையான அளவு
- சிக்கன் – 1/2 கிலோ
- உப்பு – சுவைக்கேற்ப
- கொத்தமல்லி – சிறிது
செய்முறை
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிளகு, சோம்பு, அன்னாசிப்பூ, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். பின் துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காய் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின் இதை தனியாக வைக்கவும். அதே கடாயில் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
மிக்ஸியில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்க்கவும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். நன்கு வேக வைத்து எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான அரைச்சுவிட்ட சிக்கன் கிரேவி தயார்.