பல் துலக்கும் போது இந்த தவறு செய்தால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும் என்பது தெரியுமா..
பல் துலக்கும் போது சில தவறுகள் செய்வதால் தான் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன என பல் மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
எல்லோரும் பல் துலக்கும் போது தனக்கே தெரியாமல் சில தவறுகள் செய்கின்றனர். இதனால் பற்களிலும் சரி ஈறுகளிலும் சரி பிரச்சனைகள் வருகின்றன.
இந்த தவறுகளை கட்டாயம் சரி செய்வது அவசியம். பல் துலக்கும் முன் டூத்பிரஷை சிலர் தண்ணீரில் நனைக்காமல் பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு இப்படி செய்வதால் பல்துலக்கும் போது டூத்பிரஷ் மென்மையாக இருக்காது.
இதனால் ஈறுகளில் எநிச்சல் காணம் போன்றவை வரக்கூடும். வாய் சுத்தமாக இல்லாவிட்டால் கிருமிகள் பற்களை ஆக்கிரமிக்கும். அதனால் டூத்பிரஷை தண்ணீரில் நனைத்து பயன்படுத்த வேண்டும்.
இப்படி செய்யும் போது டூத்பிரஷ் மென்மையாக மாறுவதால் பல் துலக்கும் போது ஏற்படக்கூடிய எரிச்சல் அல்லது ஈறு பாதிப்பு போன்றவை தடுக்கப்படுகிறது. இதன் மூலம் வாய் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
இதை தவிர தண்ணீர் இன்றியோ அல்லது அசிடிக் உணவுகளை சாப்பிட்டதும் உடனடியாக பல் துலக்கினால் நாளடைவில் உங்கள் பற்களின் வெள்ளை நிறம் மங்கிப் போகும். தண்ணீர் இன்றி பயன்படுத்தும் போது டூத்பிரஷ் விரிவடையாமல் இருக்கும்.
இது பற்களுக்கு மங்கலான நிறத்தையே கொடுக்கும். சிடிக் உணவுகளை சாப்பிட்ட உடனேயே பல் துலக்கினால் உங்கள் பற்களின் எனாமல் சேதமடைந்து, அதன்பின்புறமுள்ள மஞ்சள் அடுக்குகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
எனாமல் உணவுகளை சாப்பிட்டதும் பல்துலக்க கூடாது. அவ்வப்போது பல் மருத்துவரிடம் சென்று பற்களை சோதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை இரண்டு நிமிடங்களுக்கு பல் துலக்குங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மென்மையான டூத்பிரஷ்களையும் குறைந்தபட்சம் 1,350 ppm ஃபுளோரைடு உள டூத்பேஸ்டையும் பயன்படுத்த வேண்டும்.