சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா.. வெங்காயம் அதிகமா சாப்பிடுங்க
உணவின் சுவையை அதிகரிப்பதுடன், அதிகமான சத்துக்களைக் கொண்டுள்ள காய்களில் ஒன்று தான் வெங்காயம்.
பல மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயத்தை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டும். அதுவும் பச்சையாக வெங்காயம் எடுத்துக்கொள்வதால் என்ன பயன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
கோடை வெப்பத்தினால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதுடன், வெப்ப பக்கவாதமும் ஏற்படுகின்றது. இதற்கு வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வராமல் தடுக்கிறது
குளிர்ச்சியை தரும் வெங்காயத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. இவை அழற்சி எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் எதிர்த்து போராடுகின்றது.
எலுமிச்சை சாறுடன் வெங்காயத்தை சாப்பிடும் போது, செரிமானம் மேம்படுவதுடன், வயிறு தொடர்பான பிரச்சினைகளும் வராமல் தடுக்கப்படுகின்றது.
வெங்காயத்தில் கந்தகம் மற்றும் குர்சிடின் ஆகியவை உள்ளது. இவை இரண்டும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பெரிதும் உதவுகின்றது.
மேலும், வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது.