அழகான சருமம், நகங்கள், தலைமுடி வேண்டுமா.. இதை செய்தாலே போதும்
பெண்கள் பொதுவாக அழகாக இருப்பதற்கு விரும்பக்கூடிய தரப்பினர். எனவே சருமம், நகங்கள், தலைமுடி அழகாக இருப்பதற்கு என்ன செய்ய வெண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிலருக்கு உடல் அழகை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர்களுக்கு போதியளவில் ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதாகும்.
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், அது சரும நிறம், வறண்ட சருமம், எளிதில் உடையும் நகம், முடி உதிர்தல், மோசமான சரும டோன் ஆகிகவை மூலம் வெளிப்படும்.
அழகிய தோற்றத்திற்காக நாம் சரிவிகித சாப்பாட்டை உண்ணுதல் மிகவும் அவசியமாகும். எசென்ஷியல் ஃபேட்டி ஆசிட் இது நம் சருமம் மற்றும் உச்சந்தலையில் உட்புற மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
இது இயற்கையான முறையில் எண்ணெய் உற்பத்தியை தூண்டி தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. நமது உடலை பிரகாசமாக லைத்திருக்கும் ஒரு சத்தாக வைட்டமின் சி காணப்படுகிறது.
நாம் அதிகமாக லெமன், கிவி பழம், ஆரஞ்சு, சிவப்பு குடை மிளகாய், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி போன்றவற்றை உண்ணுதல் வேண்டும்.
அதிக ன்ஸ், பருப்புகள், எலும்புச் சாறு, முட்டை, குயினோவா, ஸ்பிரிலினா ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளதால் இதை தவறாமல் உண்ணுதல் நல்லது. தோல், தலைமுடி, நகங்கள் ஆகியவற்றுக்கு பலமளிக்கும் ஒரு வகையான புரதமே கொலஜன்.
இது வயதானதும் குறைந்து தோல் சுருக்கத்தை உண்டா நீக்கும்.