அடிக்கடி பிரியாணி சாப்பிடுறீங்களா.. ஆபத்து அதிகம் தெரிஞ்சிக்கோங்க
நம்மில் பெரும்பாலான நபர்கள் பிரியாணி அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இதனால் உடம்பிற்கு தீங்கு ஏற்படுமா என்பதை இந்த காட்சியில் தெரிந்து கொள்வோம்.
பிரியாணி சுவையான உணவு என்றாலும் அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அதிக அளவு கலோரிகள், கொழுப்பு, சோடியம் உப்பு உள்ளதால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
பிரியாணியில் இருக்கும் அதிகப்படியான கலோரி உடல் எடையை அதிகரிப்பதுடன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைக்கு வழிவகுக்கின்றது.
அதிக அளவு கொழுப்பு நிறைந்துள்ளதால், இரத்தத்தில் கொழுப்புச்சத்து அளவை அதிகரித்து இதுவும் இதய நோய்க்கு காரணமாக இருக்கின்றது.
பிரியாணியில் இருக்கும் சோடியம் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுப்பதுடன், பக்கவாதம், சிறுநீரக நோய் அபாயத்தை ஏற்படுத்துகின்றது.
அதிகமான எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால், செரிமான பிரச்சினை, வயிற்று எரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
பிரியாணியில் சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கின்றது. எனவே பிரியாணியை அடிக்கடி சாப்பிடாமல் அரிதாகவும் சாப்பிடுவது நல்லது.
அதற்கு பதிலாக, காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.