5 நாட்களில் முகச்சுருக்கத்தை நீக்கும் மேஜிக் தெரியுமா… இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.
பொதுவாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சிலர் இதற்காக அதிகளவில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.
இருப்பினும் வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை குறையும்.
இதற்கு போதிய சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைக்காமல் இருப்பது தான் காரணம். அழகுசாதன பொருட்களினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுகின்றது.
ஆனால் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்களுக்கு முகச்சுருக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
அந்தவகையில் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறிதளவு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை தயாரித்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
வெண்ணெய் மற்றும் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தை மென்மையாக்கும் திறன், நிறைந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் முகச்சுருக்கங்களை நீக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும்.
இரண்டு டீஸ்பூன் அஸ்வகந்தா தூள், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகச்சுருக்கம் விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் செய்யவும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சிறந்த தீர்வு கிடைக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு சுருக்கங்கள் மற்றும் தளர்வான சருமத்தை குறைக்கிறது. ஒரு பழுத்த வாழைப்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் கழுத்து மற்றும் முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனால் முசச்சுருக்கம் நாளடைவில் காணாமல் போய்விடும்.