ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா… இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.
முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்.
ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சுற்றுச்சூழல் மாசு மற்றும் இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்பதுத்தல் போன்ற காரணங்களினால் பல்வேறுப்பட்ட கூந்தல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
பொதுவாகவே அனைவரின் மத்தியிலும் முடி வறண்டு போதல் பொடுகு தொல்லை முடி உதிர்வு இள நரை மற்றும் தலைமுடி விரைவாக நரைத்தல் ஆகியன தலைமுடி சம்பந்தமான பிரச்சினையாகவுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதுவித பக்கவிளைவுகளும் இன்றி வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சிறப்பான எயார் மாஸ்க் எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பூந்திக்காய் 04
உலர்ந்த சங்கு பூ (கைபிடி அளவு)
உலர்ந்த செம்பருத்தி பூ( கைபிடி அளவு)
தயிர் 1 தே. கரண்டி
வெந்தய பொடி 1/2 கப்
செய்முறை
பூந்திக்யாய் சங்கு பூ மற்றும் செம்பருத்தி பூ ஆகியவற்றை தனித்தனியே பாத்திரங்களில் போட்டு இவற்றில் சரிசமனாக கொதிநீரை ஊற்றி 10 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும் இவற்றின் சத்துக்கள் முழுமையாக நீரில் இறங்கி தண்ணீரின் நிறம் மாற்றமடையும்.
ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
பின்னர் 1/2 கப் வெந்தய பொடியில் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஊறவைத்த தண்ணீரில் இருந்து ஒவ்வொரு கரண்டி விதம் கலந்துக்கெள்ள வேண்டும்.
குறித்த கலவையில் ஒரு கரண்டி தயிர் சேர்த்து நன்றான கலந்துக்கொள்ள வேண்டும். இந்த கவவையை தலையில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின்னர் குளிந்த நீரினால் கழுவினால் தலை முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுவதை கண்கூடாக பார்க்க முடியும்.
இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
பூந்திக்காய் ஒரு இயற்கை தூய்மைப்படுத்தி என்றுதான் சொல்ல வேண்டும். இது தலையில் உள்ள பொடுகை போக்குவதற்கு பெரிதும் துனைப்புரியும்.
சங்கு பூ தலைமுடியை கருமையாக்குவதற்கு உதவுகின்றது இதனால் இளநரை மற்றும் வேறு காரணங்களுக்காக தலைமுடி விரைவில் நரைத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது.
செம்பருத்தி பூ கூந்தலுக்கு பளப்பளப்பை கொடுப்பதுடன் முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றது. தயிர் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்கி கூந்தல் வறட்சியடைவதை தடுக்கின்றது.
வெந்தயம் ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கக் கூடிய பொருள் இது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி கூந்தல் நீளமாக வளர்வதற்கு பெரிதும் உதவுகின்றது.