இட்லி மாவில் கேக் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா… புதுவிதமான ரெசிபி…
பொதுவாகவே இட்லி தான் நமக்கு காலை உணவாகவே இருக்கும். அந்த சாப்பாட்டில் ஏதாவது மாற்றம் கேட்டால் இட்லியை வைத்தே வேறு வேறு உணவுகளை சமைத்து கொடுப்பது தான் வழக்கம்.
ஆனால் இட்லியில் கேக் செய்து சாப்பிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா…
ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
வெல்லம் – ஒரு கப்
நெய் – 2 கரண்டி
திராட்சை – கைப்பிடி
முந்திரி – கைப்பிடி
ரவை – கால் கப்
இட்லி/தோசை மாவு – 1 கப்
இட்லி மாவில் கேக்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ரவையையும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில், இட்லி/தோசை மாவு, ரவை, முந்திரி, திராட்சை, வெல்லம் வடித்தது சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில், வெண்ணெய் தடவி மாவுக்கலவையை சேர்க்க வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் தண்ணீர் வைத்து சூடாக்கி, அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து, இந்த மாவு கலந்து வைத்திருக்கும் பாத்திரத்தை அதில் வைத்து மூடிவிடவேண்டும்.
குறைவான தீயில் 40-45 நிமிடம் வேகவைத்து எடுத்துவிட்டால், சுவையான இட்லி,தோசை மாவு கேக் தயார்.