ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்

முகத்துல கொத்து கொத்தா பரு வருதா? இந்த 5 உணவுகளை எடுத்துக்கங்க… முகப்பருவே வராது…

மழைக்காலத்தில் இயல்பாகவே காற்றில் மாசுக்களும், ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இவை நம்முடைய சருமத்தில் படும்போது நிச்சயம் பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் சருமத்தில் மிக எளிதாக பாக்டீரியா தொற்றுக்கள் வளரும். இதனால் சருமத்தில் வெடிப்புகள், பருக்கள் ஆகியவை அதிக அளவில் உண்டாகும். இதை தடுக்கவும் வேகமாக சரிசெய்யவும் நம்முடைய உணவுமுறையில் கட்டாயம் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

​ஜிங்க் நிறைந்த உணவுகள்

சருமத்தில் சீபம் உற்பத்தியை சரியான அளவில் கட்டுப்படுத்தி சரியான அளவில் சுரக்கச் செய்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஜிங்க் மிக முக்கியமான ஒரு மினரலாகும்.

இதிலுள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் சருமத்தில் ஏற்படும் பருக்கள், சரும எரிச்சல், அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் குறைக்கும்.

ஜிங்கிற்கு காயங்களை ஆற்றும் ஹீலிங் பண்புகள் அதிகம் என்பதால் சருமத்தில் ஏற்படும் பிளவுகள், வெடிப்புகளை சரிசெய்து சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். அதனால் மழைக்காலத்தில் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உணவுகள்

பூசணி விதை,
கொண்டைக்கடலை,
பருப்பு வகைகள்,
நட்ஸ் வகைகள்,
முழு தானியங்கள்,
பால் பொருள்கள்,

ஆகியவற்றில் ஜிங்க் அதிகம். இவற்றை நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் பருக்கள், சரும வீக்கம் ஆகியவை குறைய ஆரம்பிக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆற்றல் வாய்ந்த ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அதனால் சருமத்தில் வீக்கம் உள்ளிட்ட இன்ஃபிளமேஷன்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

சருமத்தில் சீபம் சுரப்பை சீராக வைத்து, பருக்கள் உண்டாகாமலும் சருமத் துளைகள் பெரிதாகாமலும் பார்த்துக் கொள்ளும் தன்மை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களுக்கு உண்டு. அதோடு சருமத்தை எப்போதும் நீர்சு்சத்துடனும் மாய்ச்சரைஸிங்காகவும் வைத்துக் கொள்ளும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்

சால்மன்,
மத்தி,
கானாங்கெழுத்தி
உள்ளிட்ட மீன் வகைகளிலும்,

ஆளிவிதை,
சியா விதை,
வால்நட்,
ஆலிவ் ஆயில்,
அவகேடோ
உள்ளிட்ட தாவர அடிப்படையிலான உணவுகளிலும ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன.

​ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த உணவுகள்

ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் என்பவை நம்முடைய உடலில் உள்ள ஃப்ரீ – ரேடிக்கல்ஸைகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. அதனால் சருமத்தில் ஏற்படும் சேதங்கள் தவிர்க்கப்படுவதோடு பருக்கள் உண்டாகாமலும் தடுக்கும்.

நீங்கள் சருமத்திற்கு பயன்படுத்தும் கடினமான ரசாயன மூலக்கூறுகளால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தங்களைக் குறைப்பதோடு இன்பிளமேஷன்களையும் குறைக்கும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் கிடைக்கும். இவை சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த உணவுகள்

சிட்ரஸ் பழங்கள்,
ஸ்டிராபெர்ரி,
கிவி பழம்,
குடைமிளகாய்,
ஆகிய வைட்டமின் சி உணவுகளிலும்,

க்ரீன் டீ,
அடர்ந்த பச்சை நிறமுள்ள கீரைகள்,
இலைவடிவ காய்கறிகள்,
பெர்ரி வகைகள்
ஆகியவற்றில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன.

ப்ரோ – பயோடிக் உணவுகள்

வயிறு மற்றும் குடல் ஆரோக்கியமாக வைத்திருப்பதும் கூட நம்முடைய சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் ஜீரணத்தை தூண்டும் என்சைம்கள் சீராக இல்லாத போது இன்பிளமேஷன்கள் உண்டாகும். இந்த இன்பிளமேஷன்கள் சருமப் பிரச்சினைகளையும் தூண்டி பருக்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கும்.

இவற்றை தடுக்க ப்ரோ – பயோடிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்த ப்ரோ பயாடிக் உணவுகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும். நுண்ணூட்டச்சத்துக்களை அதிகரிக்கச் செய்து, என்சைம்களின் உற்பத்தியை அதிகரக்கச் செய்யும்.
இதனால் இன்ஃபிளமேஷன்கள் குறைந்து சருமப் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

ப்ரோ – பயாடிக் உண்வுகள்

யோகர்ட்,
சாக்கரெட் (புளிக்க வைத்த முட்டைகோஸ்),
தயிர் (அ) மோர்,
கிமிச்சி மற்றும்
பிற நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளில் ப்ரோ – பயோடிக் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.

நீர்ச்சத்துடைய உணவுகள்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நீர்ச்சத்து மிக அவசியம். உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக் கொண்டால் சருமமும் நீர்ச்சத்துடன் இருக்கும். அதனால் சருமமும் நீர்ச்சத்துடன் இருக்கும்.

நல்ல நீர்ச்சத்துடன் சருமம் இருந்தாலே சீபம் சுரப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதனால் பருக்கள் வராமல் தடுக்க முடியும். வெயில் காலத்தில் தான் அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் எல்லா பருவ காலத்திலும் நீர்ச்சத்து என்பது உடல் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு மிக அவசியம்.

நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்

வெள்ளரிக்காய்,
வாட்டர்மெலன்,
ஆரஞ்சு பழங்கள்,
செலரி,
போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இதிலிருந்து நீர்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை சேர்ந்து நமக்கு கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker