இன்று அனைவரும் ரசித்து உண்ணும் பார்பிக்யூ உணவின் வரலாறு தெரியுமா உங்களுக்கு…
வார இறுதியில் குடும்பத்துடனோ நண்பர்கள் உடனோ சேர்ந்து வெளியில் பழக்கம் இப்போது சாதாரணமாக மாறிவிட்டது. வெளியில் சென்று சாப்பிடும் பலர் ஆர்டரில் பார்பிக்யூ என்பது இடம்பெற்று விடுகிறது. சிக்கன், மட்டன் என்று எந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் பார்பிக்யூ உணவின் மீது தனி பற்று இருக்கும். அப்படி ரசித்து உண்ணும் பார்பிக்யூ உணவின் வரலாறை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
“பார்பிக்யூ” என்ற வார்த்தை இன்று பெரும்பாலும் அனைத்து வகையான வறுக்கப்பட்ட இறைச்சிகளுக்கும் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும், அது உண்மையில் ஒரு குறிப்பிட்ட செயல்முறையைக் குறிக்கிறது. அதாவது மறைமுக வெப்பத்தில் மெதுவாக சமைக்கப்படும் பாரம்பரிய உணவு சமையல் முறை தான் பார்பிக்யூ எனப்படும்.
இதன் பாரம்பரியம் என்பது மத்திய அமெரிக்க பகுதியில் இருந்துதொடங்கியுள்ளது. பொதுவாக நாம் உணவு பொருட்களை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும் என்றால் அதை உலர்த்தி காய வைத்து சேமிப்போம். வத்தல், வடகம், உலர் பழங்கள் போன்றவற்றை நினைத்து பாருங்கள். நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
அதை போலவே கரீபியன் பழங்குடி மக்கள் இறைச்சிகளை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க அதை வெயிலில் காய வைப்பார்களாம். இதைச் செய்வதில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால், இறைச்சிகள் என்ன தான் காயவைத்தாலும் சில நாட்களில் கெட்டுப்போய், பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இறைவகிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட, கரீபியன் மக்கள் சிறிய, புகைபிடிக்கும் தீயை உருவாக்கி, இறைச்சியை நெருப்பின் மீது அடுக்குகளில் வைத்துள்ளனர். புகை பூச்சிகளை விரட்டி, இறைச்சியைப் பாதுகாக்க உதவியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் பூர்வீகவாசிகள் இந்த செயல்முறைக்கு “பார்பகோவா” என்ற வார்த்தையை வைத்திருந்தனர். இதில் இருந்து தான் இன்று நாம் பயன்படுத்தும் பார்பிக்யூ என்ற வார்த்தை உருவாக்கி இருக்கக் கூடும். இந்தியாவைத் தேடி வந்த ஐரோப்பியர்கள் அமெரிக்காவை கடுபிடித்தபோது, இந்த தனித்துவமான சமைக்கும் முறையை கண்டு விரைந்துள்ளனர்.
பின்னர் ஸ்பானிஷ் காரர்கள் தென் அமெரிக்கா பக்கம் குடியேறும்போது இந்த சமயம் முறையையும் கற்று அங்கு பரப்பியுள்ளனர். அது மாட்டும் இல்லாமல் அவர்கள் ஐரோப்பிய பன்றிகள் மற்றும் கால்நடைகளை தங்களது புதிய காலனித்துவ உலகத்திற்கு இடமாற்றம் செய்யதுள்ளனர்.
அப்போது தென்னமெரிக்க காலனிகளுக்கு முதன்மை இறைச்சி ஆதாரமாக பன்றிகள் மாறியது. பன்றிகள் சிறிய கவனிப்புடன் செழித்து வளரும் திறன் காரணமாக தெற்கில் பன்றி அதிகம் வளர்க்கப்பட்டு உண்ணப்பட்டது. பார்பிக்யூ உணவுகளின் பிரதான இரையாக பன்றி இறைச்சி மாறியது.
இறைச்சியை உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் ரேக்குகள் குழிகள் மற்றும் ஸ்மோக்ஹவுஸால் மாற்றப்பட்டன. அனலில் வைத்து நீண்ட நேரம் சமைக்கும் முறை சலிப்பானதாக இருந்தாலும் மலிவு விலை உணவாக மாறியது. அதோடு பார்பிக்யூ ஏராளமான உணவை ஒரே நேரத்தில் சமைக்க அனுமதித்ததால் திருவிழாக்கள் மற்றும் பிக்னிக் போன்ற பெரிய கூட்டங்களுக்கான மெனு உருப்படியாக விரைவாக மாறியது.
அதோடு சாதாரணமாக சமைத்த உணவை விட அனலில் பொறுமையாக வேகவைத்த இயக உணவின் சுவை அதிகப்படியான மக்களை ஈர்த்ததால். அணைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்டது. அப்படியே நாடு விட்டு நாடு பரவி இப்போது உலகம்முழுதும் பார்பிக்யூ உணவுகள் சமைக்கப்பட்டு வருகிறது.
பன்றி கறி மட்டும் இல்லாமல் கோழி, ஆடு, மாட்டிறைச்சி, வாத்து, மீன், என்று அணைத்து விதமான இறைச்சிகளை பார்பிக்யூ முறையில் சமைக்கப்படுகிறது. அதோடு காய்கறிகளையும் இதே முறையில் சமிக்கின்றனர். எல்லா நாடுகளும் அதில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து தங்கள் சொந்த பாணியிலான பார்பிக்யூவை பரிமாறி வருகின்றன. அனலில் மட்டும் அல்லது இப்பொது கொஞ்சம் நெருப்பிலும் சுடப்படுகிறது.