மாதவிடாயின் போது தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறீர்களா..? உங்களுக்கான வலி நிவாரண டிப்ஸ்..!
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்கு உதிரப்போக்கு ஏற்படுகிறது. சிலருக்கு இது 7 நாட்கள் வரையிலும் கூட நீடிக்கலாம். இந்த நாட்களில் எஇர்ச்சல், எண்ண தடுமாற்றங்கள், வயிற்று பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
இதனால் உடலிலும், உள்ளத்திலும் மிக அதிகப்படியான ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது. இதன் எதிரொலியாக அன்றாட பணிகளை செய்வதற்கே பெண்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், மாதவிலக்கு கால வலியை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
இதனால் உடலிலும், உள்ளத்திலும் மிக அதிகப்படியான ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது. இதன் எதிரொலியாக அன்றாட பணிகளை செய்வதற்கே பெண்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், மாதவிலக்கு கால வலியை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
இதற்கு இயற்கையான தீர்வு முறைகள் இருக்கின்றன. உணவில் மாற்றங்கள், சில மூலிகைகளை எடுத்துக் கொள்வது மற்றும் குறிப்பிட்ட தாதுக்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்த வலியை தவிர்க்க முடியும். ஒவ்வொரு மாதமும் இதைச் செய்து கொள்ளலாம்.
சந்தையில் வெகு சுலபமாக கிடைக்கக் கூடியது. டீ மற்றும் இதர உணவுகளில் நாம் பொதுவாக சேர்த்துக் கொள்கின்ற மசாலா பொருள் தான். இதன் மூலமாக எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இஞ்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக மாதவிலக்கு கால வலிக்கு நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உங்களுக்கான அசௌகரியத்தை குறைக்கும். உடலில் அழற்சி ஏற்படுவதைத் தடுக்கும்.
இஞ்சி : சந்தையில் வெகு சுலபமாக கிடைக்கக் கூடியது. டீ மற்றும் இதர உணவுகளில் நாம் பொதுவாக சேர்த்துக் கொள்கின்ற மசாலா பொருள் தான். இதன் மூலமாக எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இஞ்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக மாதவிலக்கு கால வலிக்கு நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உங்களுக்கான அசௌகரியத்தை குறைக்கும். உடலில் அழற்சி ஏற்படுவதைத் தடுக்கும்.
பார்லி : மாதவிலக்கை ஒழுங்குபடுத்துவது மற்றும் மாதவிலக்கு நாட்களின் வலியை குறைப்பது என தீர்வுகளை கொண்டுள்ளது பார்லி. இதில் மிகுதியான அளவில் மெக்னீசியம் உள்ளது. இது இயற்கையாகவே மாதவிடாய் வலியை குறைக்க கூடியதாகும். இது தவிர இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் பி ஆகிய சத்துக்களும் பார்லியில் உள்ளன. பொதுவாக மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அவற்றுக்கு தீர்வு அளிப்பதாக பார்லிஅமையும் மற்றும் உடலை சுத்தப்படுத்தும்.
நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மசாலா பொருள் இது. சிறுநீர்பை தசைகளை இலகுவாக்குவதன் மூலமாக மாதவிலக்கு கால வலியை குறைக்க இது உதவியாக அமையும். மாதவிலக்கு வலி ஏற்படும்போது ஒரு கப் வெந்நீரில் வெந்தயம் மற்றும் தேன் சேர்த்து அருந்தலாம். தினசரி 3 முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
வெந்தயம்: நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மசாலா பொருள் இது. சிறுநீர்பை தசைகளை இலகுவாக்குவதன் மூலமாக மாதவிலக்கு கால வலியை குறைக்க இது உதவியாக அமையும். மாதவிலக்கு வலி ஏற்படும்போது ஒரு கப் வெந்நீரில் வெந்தயம் மற்றும் தேன் சேர்த்து அருந்தலாம். தினசரி 3 முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படுவதை தடுத்து, உங்களுக்கான அசௌகரியத்தையும் குறைக்கும். வெந்தயக் கீரையை மாதவிலக்கு காலத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் சேர்த்து வரலாம்.
மேற்கண்ட மூன்று பொருட்களை தவிர்த்து, அழற்சிக்கு எதிரான பண்புகளைக் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மருந்தகங்களில் வாங்கிப் பயன்படுத்தும் மருந்துகளைக் காட்டிலும் இயற்கையான தீர்வு முறைகள் நல்லதாகும்.