வெறும் 10 நிமிடம் போதும்.. நாவில் எச்சில் ஊறவைக்கும் பட்டர் கார்லிக் காளான் தயார் – இதோ ரெசிபி!
சிக்கனை பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்க முடியாது…. அதேபோல காளான் பிடிக்காத அசைவ விரும்பிகளும் இருக்க முடியாது. ஏனென்றால், அசைவத்திற்கு ஏற்ற புரத சத்துக்களை கொண்டுள்ளது காளான்.
தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் என அனைத்து விதமாக உணவுக்கும் தோதாக இருக்கும் சுவையான பட்டர் கார்லிக் காளான், மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உப்பில்லாத வெண்ணெய் – 100 கிராம்.
வெங்காயம் – 1 நறுக்கியது.
காளான் – 600 கிராம்.
பூண்டு – 1/4 கப் பொடியாக நறுக்கியது.
உப்பு – 1 தேக்கரண்டி.
மிளகு தூள் – 1 1/2 தேக்கரண்டி.
கொத்தமல்லி இலை நறுக்கியது – கால் கப்.
செய்முறை :
முதலில், கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு, வெட்டி வைத்த காளான் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
இதையடுத்து, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை காளான் பொன்னிறமானதும் சேர்த்து கலந்து இறக்க்கினால் பட்டர் கார்லிக் காளான் தயார்.