ஆரோக்கியம்உறவுகள்மருத்துவம்

மாதவிடாய் 5 நாட்கள் வரை நீடித்தால்தான் ஆரோக்கியமானதா..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு உயிரியல் நிகழ்வாகும் பெண்ணின் கருமுட்டையானது கருவுறாத பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து பெண்ணுறுப்பின் வழியாக வெளியேற்றப்படும். அந்த நேரத்தில் ரத்தம் வெளியேறும் நிகழ்வானது மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு உயிரியல் சம்பந்தப்பட்ட நிகழ்வாக இருந்தாலுமே பல்வேறு கலாச்சாரங்களிலும் இதைப் பற்றிய நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் தற்போது வரை இருந்து வருகின்றன.

ஆனால் உண்மையிலேயே அவை அனைத்தும் உண்மையா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஒவ்வொரு வருடமும் மே மாதம் 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட சமூகத்தால் விளக்கி வைக்கப்பட்ட ஒரு நிகழ்வாக பார்க்கப்படும் இந்த மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைப் பற்றிய புரிதலை உருவாக்குவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் மாதவிடாய் பற்றி நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு கட்டுக்கதைகளையும் அவற்றின் உண்மை தன்மையை பற்றியும் பெங்களூருவை சேர்ந்த மருத்துவரான ஸ்வேதா எம்பி என்பவர் கூறியுள்ளார்.

கட்டுக்கதை: மாதவிடாய் காலங்களில் போது வெளியேறும் ரத்தமானது அசுத்தமானது!

உண்மை: மாதவிடாய் காலங்களில் போது வெளியேறும் ரத்தமானது அசுத்தமானது என்ற கருத்து முற்றிலும் தவறானது ஆகும். மாதவிடாய் என்பது என்னவென்று புரிந்து கொள்ளாத பலரால் இந்த கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

கட்டுக்கதை: மாதவிடாய் தவறும் பட்சத்தில் கரு உருவாகிவிட்டது என்று அர்த்தம்!

உண்மை: சில சமயங்களில் மாதவிடாய் ஆனது சில நாட்கள் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வு தான். இதற்கு ஹார்மோன் சமநிலையற்ற தன்மை அதிக எடை, ஆரோக்கியமற்ற உணவு கட்டுப்பாடு, உடல் நலக் குறைபாடு மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனவே கருத்தரித்து விட்டதாக சந்தேகம் இருந்தால் அதற்கான சோதனையை மேற்கொள்வது நல்லது.

கட்டுக்கதை: மாதவிடாய் காலங்களில் போது அதிக எடை தூக்கும் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும்!

உண்மை: உண்மையிலேயே மாதவிடாய் காலங்களின் போது அதிக எடை தூக்கக்கூடாது என்பதற்கும், உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பதையும் நிரூபிக்கும் வகையில் எந்தவித மருத்துவ ஆதாரங்களும் தற்போது இல்லை. அதற்கு எதிர் மாறாக உடற்பயிற்சி செய்வது, மாதவிடாய் காலங்களில் போது ஏற்படும் தசை பிடிப்புகளை சரி செய்ய உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் செரட்டோனின் அதிக அளவில் சுரப்பதற்கு உதவுகிறது.

கட்டுக்கதை: மாதவிடாய் காலங்களில் போது கருத்தரிக்க வாய்ப்புகள் இல்லை!

உண்மை: மாதவிடாய் காலங்களில் போது கருத்தரிக்கும் நிகழ்வானது மிகவும் அசாதாரணமான ஒன்று என்றாலும், அது முடியவே முடியாது என்று கூறுவதற்கு இல்லை. பொதுவாகவே மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு 28 முதல் 30 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழும். இதைவிட குறுகிய மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பட்சத்தில், அந்த ஆறு நாட்களில் முடிவில் ஒரு பெண் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால் உயிரணுவானது உயிர் பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் அங்கு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

கட்டுக்கதை: மாதவிடாய் காலங்களில் போது தலை குளிக்க கூடாது!

உண்மை: மாவிடாய் காலங்களின் போது தலை குளிக்க கூடாது என்று எந்த ஒரு ஆய்வும் தற்போது வரை நிரூபிக்கவில்லை. மேலும் இதனால் எந்த விதம் கெடுதல்களும் ஏற்படாது.

கட்டுக்கதை: மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அறிகுறியானது மனதில் விளைவால் ஏற்படுகிறது!

உண்மை: உண்மையிலேயே மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அறிகுறிகள் பெண்ணின் உடலில் இருக்கும் ஹார்மோன்களினால் உண்டாகும் நிகழ்வாகும். பொதுவாக ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் முன்னதாகவே இதன் அறிகுறிகள் தென்பட துவங்கிவிடும். மேலும் இது பெண்ணிற்குப் பெண் மாறுபடும் என்பதும், அந்த நேரங்களில் வீக்கம் தலைவலி போன்ற உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளும், மனநிலையில் மாறுதல், அதிகபடியான கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளும் ஏற்படும்.

கட்டுக்கதை: மாதவிடாய் கண்டிப்பாக ஒரு வாரம் வரை நீடிக்க வேண்டும்!

உண்மை: மாதவிடாய் நடக்கும் காலமானது பெண்ணிற்கு பெண் மாறுபடும். சில சமயங்களில் வழக்கம் போலவும் சில சமயங்களில் சீரற்ற கால இடைவெளியிலும் இவை ஏற்படலாம். இதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன்கள் தானே தவிர வேறு ஏதும் கிடையாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker