வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டால் ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கலாம்..!
தற்போதைய காலகட்டத்தில் நம்மில் பலர் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடையை குறைக்க நாம் அனைவரும் டயட், வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சி, டான்ஸ், உணவு கட்டுப்பாடு என பல விஷயங்களை முயற்சி செய்திருப்போம். ஆனால், நமக்கு எந்த பலனும் கிடைத்திருக்காது.
அப்படி மன உளைச்சலுக்கு நீங்களும் ஆளாகியிருந்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு அற்புதமான பானம் பற்றி கூறுகிறோம். இந்த பானத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெறும் 7 நாட்களில் உங்களுடைய உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். இது நல்ல ரிசல்ட் கொடுப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். வாருங்கள் அந்த அற்புத பானத்தை எப்படி செய்யலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 1.
துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்.
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்.
புதினா இலை – 20 கிராம்.
செய்முறை :
இந்த அற்புத பணத்தை செய்ய, வெள்ளரிக்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து. சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெள்ளரிக்காய் தோலை நீக்க வேண்டாம்.
நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, புதினா இலை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த இந்த விழுதை 7 கிளாஸ் தண்ணீருடன் கலந்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும்.
மறுநாள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், இதிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்கவும். இந்த தண்ணீரை ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நல்ல மற்றம் தெரியும்.
ஏழு நாட்கள் கழித்து உங்களுடைய உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்களே பார்த்து அசந்து விடுவீர்கள்.
குறிப்பு : அல்சர், மூலம் அல்லது மூக்கில் இரத்தக் கசிவு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம். மேலும், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களும், கர்ப்பிணிகளும் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.