குடை மிளகாயை ஒரு முறை இப்படி சமைத்து கொடுங்க… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
நம்மில் பலருக்கு குடைமிளகாய் பிடிக்கும். அதும் டயட்டில் இருப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அனைத்திலும் கேப்சிகம் சேர்ப்பார்கள். அந்த வகையில், குடைமிளகாய் வைத்து சப்பாத்திக்கு ஏற்ற கேப்சிகம் ஜுன்கா ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் – 3.
பச்சை மிளகாய் – 3.
வெங்காயம் – 1
பூண்டு விழுது – 1 ஸ்பூன்.
சீரகம் – 1 ஸ்பூன்.
கடுகு – 1 ஸ்பூன்.
மஞ்சள் – ½ ஸ்பூன்.
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்.
மல்லி பொடி – 1 ஸ்பூன்.
கடலை மாவு – 3 ஸ்பூன்.
எலுமிச்சை பழம் – 1.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட குடைமிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைக்கவும்.
இதை தொடர்ந்து எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை நறுக்கி – சாறு புழிந்து 1 ஸ்பூன் அளவுக்கு தனியே எடுத்து வைக்கவும்.
தற்போது, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் சீரகம், கடுகு, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
இதைடுத்து, அதில் பூண்டு விழுது, நறுக்கிய குடைமிளகாய், மஞ்சள், மிளகாய் பொடி, மல்லிப்பொடி, உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து குடை மிளகாய் வேகும் வரை நன்கு வதக்கவும்.
இப்போது, குடை மிளகாய் நன்கு வதங்கியதும் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான கேப்சிகம் ஜுன்கா தயார்.
இது சப்பாத்தி மற்றும் வெள்ளை சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.