உங்க வீட்டுல அவல் இருக்கா..? இந்த ரெசிபியை உங்க குழந்தைக்கு செஞ்சு கொடுங்க..!
இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று, இன்னைக்கு என்ன சமைக்கலாம் என்பது. அதுவும், டீ டைம் ஆகிவிட்டால் வீட்டில் இருப்பவர்கள் ஸ்னாக்ஸ் செய்து தர சொல்லி நச்சரிப்பார்கள். பஜ்ஜி, பக்கோடா தவிர நமது நினைவுக்கு எதுவும் வராது.
ஆனால், அவல் வைத்து கட்லெட் செய்வது எப்படி என உங்களுக்கு கூறுகிறோம். அவலில் கட்லெட் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்க.
தேவையான பொருட்கள் :
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 2.
அவல் – 1 கப்.
இஞ்சி பூண்டு விழுது – ½ ஸ்பூன்.
கொத்தமல்லி – 1 கொத்து.
உப்பு, எண்ணெய் – போதுமான அளவு.
மிளகு பொடி – ½ ஸ்பூன்.
சோள மாவு – 3 ஸ்பூன்.
மஞ்சள் – ¼ ஸ்பூன்.
மிளகாய் தூள் – ½ ஸ்பூன்.
சாட் மசாலா – ½ ஸ்பூன்.
மைதா மாவு – 1 ஸ்பூன்.
செய்முறை :
முதலில், கட்லெட் செய்ய எடுத்துக்கொண்ட உருளைக்கிழங்கினை குக்கரில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து அவித்து, தோல் நீக்கி மசித்து தனியே எடுத்து வைக்கவும்.
இப்போது, அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்குடன், சுத்தம் செய்து வைத்த அவலையும் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
இதை தொடர்ந்து, அந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகு பொடி, சோள மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இப்போது, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்லெட் பதத்திற்கு பிசைந்துக்கொள்ள கட்லெட் மாவு தயார்.
இப்போது, கட்லெட்டினை பொரித்து எடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து , அதில் தேவையான தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், கட்லெட் செய்வதற்கு தயார் செய்து வைத்துள்ள சேர்மத்தை தேவையான வடிவத்தில் சிறிதாக உருட்டி, எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க சுவையான அவல் கட்லெட் தயார்.
பதமாக பொரித்து எடுத்த அவல் கட்லெட்டினை ஒரு தட்டில் வைத்து, டீயுடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.