ஆரோக்கியம்சமையல் குறிப்புகள்புதியவை

ப்ரெஞ்ச் ப்ரைஸ் தெரியும்.. அதென்ன பூசணிக்காய் ப்ரைஸ்… இதோ ரெசிபி.!

நம்மில் பலருக்கும் ப்ரெஞ்ச் ப்ரைஸ் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கும். நமக்கு மட்டுமா?… நேற்று பிறந்த குழந்தைக்கும் தான். ஆனால், அது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்பது நமக்கு தெரியும். வீட்டிலேயே உருளைக்கிழங்கிற்கு பதில் எப்போதாவது வேறு சில காயை வைத்து ப்ரைஸ் செய்ய முயற்சித்துள்ளீர்களா?….

நம்மில் பலருக்கும் பூசணிக்காய் பிடிக்காது. பூசணிக்காயை பொரியல், பச்சடி, சாம்பார், கூட்டு என எது வைத்தாலும் அதை நமது வீட்டில் இருப்பவர்கள் தொட்டு கூட பார்ப்பதில்லை. ஆனால், பூசணிக்காயை இப்படி செய்தால் உங்கள் வீட்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் பூசணிக்காய் வைத்து ப்ரைஸ் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் – 1.

மிளகு பொடி – ½ ஸ்பூன்.

பட்டை தூள் – ½ ஸ்பூன்.

சீரகம் – ½ ஸ்பூன்.

பூண்டு விழுது – 1 ஸ்பூன்.

மிளகாய் விழுது – ½ ஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

எண்ணெய் – தேவையான அளவு.

சோளம் மாவு – அரை கப்.

செய்முறை :

முதலில், ப்ரைஸ் செய்ய எடுத்து வைத்துள்ள பூசணிக்காயை தோல் மற்றும் விதை நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்துவைக்கவும். இப்போது அதை, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பின்னர், அகலமான மற்றும் பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் போதுமான அளவு தண்ணீர் நிரப்பி, பூசணிக்காயினை அதில் சேர்த்து சுமார் 30 நிமிடத்திற்கு ஊற வைத்து தனியே எடுத்துக்கொள்ளவும்.

இதற்கிடையே, மற்றொரு பாத்திரத்தில் மிளகு பொடி, பட்டை தூள், சீரக பொடி, பூண்டு விழுது, மிளகாய் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதையடுத்து, ஊறவைத்துள்ள பூசணியை தண்ணீர் இல்லாமல் துடைத்து, நீள நீளமான துண்டுகளாக வெட்டிக்கோள்ளவும். வெட்டியா துண்டுகளை, இந்த மசாலா கலவையில் சேர்த்து நன்கு பிரட்டவும்.

இதனிடையே ஓவனை 200° C வெப்பநிலையில் 15 நிமிடத்திற்கு Pre Heat செய்து. தயார் நிலையில் வைக்கவும். இப்போது, பேக்கிங் ட்ரே ஒன்றில் பூசணி துண்டுகளை பரவலாக அடுக்கி, ஓவனில் வைத்து 20 நிமிடங்களுக்கு 200° C வெப்பநிலையில் பேக் செய்து எடுக்க சுவையான பூசணி ப்ரைஸ் தயார்.

ஒருவேளை, உங்கள் வீட்டில் ஓவன் இல்லை என்றால், மசாலா தாவி வைத்துள்ள பூசணி மீது கான் மாவு தூவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்தால் பூசணி ப்ரைஸ் ரெடி.

இந்த சுவையான பூசணி ப்ரைஸினை ஒரு கோப்பையில் வைத்து உங்களுக்கு பிடித்தமான சட்னி மற்றும் சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker