குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் குலோப் ஜாமூன் செய்வது எப்படி? – இதோ ரெசிபி!
இனிப்பை விரும்புவோருக்கு கண்டிப்பாக குலோப் ஜாமூன் பிடிக்கும். குலாப் ஜாமூன் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு இந்திய இனிப்பு உணவு. புத்தாண்டு, பிறந்த நாள் என எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் குலோப் ஜாமுன் இல்லாமல் துவங்காது.
நம்மில் பலருக்கு சாக்லேட் பிடிக்கும், அப்படி அனைவருக்கும் பிடித்த குலோப் ஜாமூனை சாக்லேட் பயன்படுத்தி எப்படி செய்யலாம் என இந்த தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா – 4 ஸ்பூன்.
பால் பவுடர் – 2 கப்.
கோக்கோ பவுடர் – 2 ஸ்பூன்.
பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்.
நெய் – 2 ஸ்பூன்.
சர்க்கரை – 2 கப்.
ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்.
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் அகலமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் 3 கப் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
பாகு திடமாகும் நிலையில், அடுப்பை சிம்மில் வைத்து – பின் இதனுடன் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
இதற்கிடையில், ஒரு மிக்சிங் கோப்பையில் மைதா, கொக்கோ பவுடர், சாக்லேட் பொடி, பேக்கிங் பவுடர் ஆகியவற்றையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
தொடர்ந்து இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் போதுமான அளவு நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள, குலோப் ஜாமூன் செய்வதற்கான சேர்மம் தயார்.
இப்போது, ஜாமூன் சுட்டு எடுக்க பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும், இதில் பிசைந்து வைத்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும்.
பொன்னிறமாக பொரித்து எடுத்த இந்த ஜாமூன் உருண்டைகளை, தயாராக உள்ள சர்க்கரை பாகில் சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்க, சுவையான சாக்லேட் குலோப் ஜாமுன் தயார்.