ஊட்டச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப் செய்வது எப்படி?
நம்மில் பலருக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு பிடிக்கும். ஆனால், அதை எப்பவும் வெறுமனே அவித்து சாப்பிடுவோம். ஆனால், ஊட்டச்சத்து மிக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்படுத்தி ஆரோக்கியம் மிக்க சூப் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், அதற்கான ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 700 கிராம்.
வெங்காயம் – 1.
கேரட் – 2.
இஞ்சி – 10 கிராம்.
பூண்டு – 1.
மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்.
உப்பு, மிளகு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில், எடுத்துக்கொண்ட வெங்காயம், கேரட்டினை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.
இதை தொடர்ந்து எடுத்துக்கொண்ட இஞ்சி, பூண்டினை சுத்தம் செய்து பின் விழுதாக அரைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
இதனிடையே ஒரு குக்கரில் போதுமான அளவு தண்ணீருடன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து 4 விசில் வர நன்கு வேக வைத்து, தோல் நீக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
தற்போது, சூப் தயார் செய்ய பாத்திரம் ஒன்றை எடுத்து, அதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதையடுத்து, அவித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சீரக பொடி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
சேர்மம் சற்று திடமாக மாறும் நிலையில் இதில் ஒரு கொத்து கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான ‘சூப்’ தயார்.
ஆரோக்கியம் நிறைந்த இந்த சூப்பினை ஒரு கோப்பையில் ஊற்றி பின், இதன் மீது சிறிதளவு மிளகு தூள் சேர்த்து சுட சுட பரிமாறலாம்.