ஆரோக்கியம்மருத்துவம்

இந்த நேரத்தில் மட்டும் பழங்களை சாப்பிடாதீங்க.. மீறினால் உடல் நலத்திற்கே கேடு தரும்..!

பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் இதய நோய்களை விரட்டுவது வரை பலவகையான நன்மைகளை பழங்கள் நமக்கு அளிக்கிறது. எனினும் பழங்களை சாப்பிடுவதற்கு என்று ஒரு சில விதிமுறைகள் உள்ளன.

அவற்றை சரியான அளவில், சரியான நேரத்திலும் சாப்பிட்டால் மட்டுமே பழங்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை நாம் முழுமையாக அடையலாம். பழங்களை தவறான முறையில் சாப்பிடுவது ஒரு சில உடல்நல சிக்கல்களுக்கும் வழி வகுக்க வாய்ப்பு உள்ளது.

ஆப்பிள்கள், பியர், வாழைக்காய், கிரான்பெர்ரிகள், மாதுளம் பழங்கள், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் தர்பூசணி பழங்கள் போன்றவை வறண்ட, குளுமையான மற்றும் கனமான இயல்பை கொண்டவை. இது திசுக்களை இறுக்கவும், வியர்வையை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியவை.

எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, ப்ளம்ஸ், கிவி மாங்காய் போன்ற பழங்கள் எண்ணெய் தன்மை நிறைந்ததாகவும், வெப்ப விளைவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றன. இவற்றின் புளிப்பு சுவை வாயில் சுரக்கும் உமிழ் நீரின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது திசுக்களை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது.

மாம்பழம், நன்கு பழுத்த வாழைப்பழங்கள், பப்பாளி, பீச், அவகாடோ, அன்னாசிப்பழம், ப்ளம்ஸ் போன்ற இனிப்பு சுவை நிறைந்த பழங்கள் இயற்கையில் மென்மையாகவும், எண்ணெய் தன்மை நிறைந்ததாகவும், லேசாக கனமானதாகவும் இருக்கும். இது உடல் உடலுக்கு தேவையான போஷாக்கை அளிக்கிறது. ஆயுர்வேதத்தை பொருத்தவரை இனிப்பு சுவையானது திசுக்களை வளர்க்கவும், தசைகள், பற்கள், நகங்கள் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும்.

பழங்களை சாப்பிடும் பொழுது நீங்கள் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கியமான விதிகள்:-

பழங்களை எப்பொழுதும் பிற உணவுகளோடு கலந்து சாப்பிடக்கூடாது. பழங்களை காய்கறிகள், தானியங்கள், பால், தயிர் மற்றும் இறச்சிகளோடு சேர்த்து சாப்பிடுவது செரிமான சிக்கல்களுக்கு வழிவகுப்பதோடு நச்சுக்களையும் வெளிப்படுத்தும். பழங்கள் எளிதில் செரிமானம் ஆகிவிடும். பழங்கள் முழுமையாக செரிமானமாக மூன்று மணி நேரம் மட்டுமே எடுக்கும். ஒரு மணி நேரம் வயிற்றிலும், ஒரு மணி நேரம் சிறுகுடலிலும், ஒரு மணி நேரம் பெருகுடலிலும் பழங்களானது ஜீரணிக்கப்படுகின்றது.

பொழுது சாய்ந்த பிறகு ஒருபோதும் பழங்களை சாப்பிட வேண்டாம். ஏனெனில் பழங்களில் காணப்படக்கூடிய செரிமான நொதிகளானது நமது தூக்க சுழற்சியை பாதிக்கக்கூடும். அதோடு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு பழங்களை சாப்பிடுவது ரத்த சர்க்கரையில் அதிகரிப்பை உண்டாக்கும். இதனால் தூங்குவதில் சிக்கல் உண்டாகும்.

பழங்களை பிற பழங்களோடு சேர்த்து சாப்பிடுவதையும் தவிர்க்கவும். இதனால் செரிமான சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு விதமான செரிமான தன்மையை கொண்டவை. அவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பொழுது அவற்றை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker