கோதுமை மாவு முதல் சுத்திகாிக்கப்பட்ட மாவு, கேழ்வரகு மாவு மற்றும் ஓட்ஸ் மாவு வரை பலவிதமான மாவு வகைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. கோதுமை மாவு அல்லது ஆட்டா இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது.
கோதுமை மாவு முதல் சுத்திகாிக்கப்பட்ட மாவு, கேழ்வரகு மாவு மற்றும் ஓட்ஸ் மாவு வரை பலவிதமான மாவு வகைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. கோதுமை மாவு அல்லது ஆட்டா இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது.
மாவை பத்திரப்படுத்தி வைக்க முக்கிய குறிப்புகள்:
காற்று புகாத பாத்திரங்களில் மாவை இட்டு அதை சரக்கு வைக்கும் அறைகளில் வைக்கலாம். இறுக்கமான மூடி கொண்ட உலோக பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் எளிதில் பூச்சிகள் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது.
மஞ்சள், இஞ்சி
அதிக அளவு மாவை வாங்கும் போது அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம். பலா் மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் மஞ்சள் அல்லது இஞ்சி ஆகியவற்றைப் போட்டு அதன் மூலம் மாவில் பூச்சிகள் ஊடுருவாத வண்ணம் தடுக்கின்றனா்.
பிரியாணி இலைகள், கிராம்பு
பூச்சிகள் மாவை தாக்காமல் இருக்க மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம். அதாவது 3 அல்லது 4 பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் மாவை பூச்சிகள் தாக்காது. மேலும் மாவு இருக்கும் பாத்திரங்களைச் சுற்றி கிராம்புகளைத் தூவலாம். அதன் மூலம் பூச்சிகள் அண்டாமல் மாவை பாதுகாக்கலாம்.
நீண்ட நாட்கள் மாவு கெடாமல் புதிதாக இருக்க..
நீண்ட நாட்கள் மாவு கெடாமல் புதிதாக இருக்க வேண்டும் என்றால் அதை நாம் எவ்வாறு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதில் தான் அடங்கி இருக்கிறது. முறையாக மாவை பத்திரப்படுத்தி வைத்தால், அறையின் சாதாரண வெப்பநிலையில் 6 முதல் 8 மாதங்களுக்கு அது கெடாமல் இருக்கும். குளிா்சாதனப் பெட்டியில் வைத்தால் 1 வருடத்திற்கு பாதுகாக்கலாம். அதே நேரம் குளிா்சாதனப் பெட்டியில் உள்ள உறைபனிப் பெட்டிக்குள் வைத்தால் 2 ஆண்டுகள் வரை மாவை கெடாமல் பாதுகாக்கலாம். வெள்ளை மாவுகளில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். முழுக் கோதுமை மாவு மற்றும் பசையம் இல்லாத மாவுகள் குறைந்த வாழ்நாட்களையே கொண்டிருக்கின்றன.
கெட்டுப்போன மாவுகளை எவ்வாறு கண்டறிவது?
மாவை நுகா்ந்து பார்த்தாலே அது நன்றாக இருக்கிறதா அல்லது கெட்டு போயிருக்கிறதா என்று கண்டுபிடித்து விடலாம். கெடாமல் நன்றாக இருக்கும் மாவிலிருந்து வரும் வாசனை அருமையாக இருக்கும். அதே நேரத்தில் கெட்டுப்போன மாவில் இருந்து ஒரு மாதிாியான கெட்ட வாசனை வரும். மாவைப் பாா்த்ததும் அது நன்றாக இருக்கிறதா அல்லது கெட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கலாம். மாவில் ஈரப்பதம் இருந்தால் அவற்றில் கட்டிகள் உருவாகும் மற்றும் பூஞ்சைகள் உருவாகும். அவ்வாறு கட்டிகள் மற்றும் பூஞ்சைகள் இருந்தால் அந்த மாவு கெட்டுப்போன மாவு ஆகும். மாவை வாங்கும் போது அதன் ஆயுட்காலத்தைப் பாா்த்து வாங்க வேண்டும்.