அழகு..அழகு..புதியவை

வெயில் காலத்திலும் ஜோரா முடி வளர fruits hair mask

மந்தமான மற்றும் சேதமடைந்த முடி அனைத்து வயதினருக்கும் தலைவலி பிரச்சனை தான். தீங்கு விளைவிக்கும் இராசயனங்கள், மன அழுத்தம், சுற்றுச்சூழல், அதிக வெப்பம் இடையே உங்கள் கூந்தலை காப்பாற்றிகொள்ள நீங்கள் ஹேர் பேக் பயன்படுத்தலாம். கோடையில் உங்கள் கூந்தலை குளிர்வித்து அதன் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஃப்ரூட் ஹேர் மாஸ்க் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சருமத்துக்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் காய்கறிகளும் பழங்களும் பெரிதும் உதவும். உள்ளுக்கு எடுப்பது போன்று மேற்பராமரிப்புக்கும் இதை பயன்படுத்தலாம். இது கூந்தல் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். பழங்கள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். இந்த இரண்டுமே முடிக்கு அவசியமும் கூட. எந்த பழங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

வாழைப்பழம்

பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமான வாழைப்பழத்தில் இயற்கையான எண்ணெய்கள் உள்ளன. அது முடியை மென்மையாக நிர்வகிக்க செய்கிறது. அவை முடியின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பாதுகாக்கின்றன. இதனால் முடி உதிர்தல் மற்றும் பிளவு முனைகளை தடுக்கிறது. வாழைப்பழத்தை மேற்பூச்சாக பயன்படுத்தும் போது முடி வளர்ச்சிக்கு சிறந்த பழமாக சொல்லலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து பிரகாசத்தை அளிக்கிறது.

எப்படி பயன்படுத்துவது

ஒரு வாழைப்பழத்தை எடுத்து மசிக்கவும். அதில் 2 டீஸ்புன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இந்த கலவையில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். அனைத்தையும் மென்மையாக குழைத்து பேஸ்ட்டை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி விடவும். பிறகு 30 நிமிடங்கள் வைத்திருந்து கூந்தலை அலசி எடுக்கவும்.

பப்பாளி

பப்பாளி முடி வளர்ச்சிக்கு சிறந்த பழம். இது வழுக்கையை தடுக்கும் அளவுக்கு செயல்படும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும். இது வேர்களில் இருந்து முடியை வலுப்படுத்தவும் மயிர்க்கால்களை வலுவாக்கவும் செய்கிறது. பப்பாளி உயிரற்ற முடிக்கு உயிரூட்டுகிறது.

எப்படி பயன்படுத்துவது

பப்பாளி பழத்தை மசித்து 4 டீஸ்பூன் அளவு எடுத்து 2 டீஸ்பூன் தேங்காயெண்ணெய் கலக்கவும். இந்த கலவையை பயன்படுத்தி உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.

ஸ்ட்ராபெர்ரிகள்

உச்சந்தலையில் தொற்றுகளுடன் போராடுகிறீர்கள் எனில் முடி வளர்ச்சிக்கு ஸ்ட்ராபெர்ரி சிறப்பாக உதவும். மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களால் உட்செலுத்தப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகள் ஈரப்பதம் காரணமாக உண்டாகும் பூஞ்சை தொற்றுகள் உச்சந்தலையில் வளராமல் தடுக்கிறது. இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.

எப்படி பயன்படுத்துவது

முடியின் நீளத்துக்கேற்ப ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து அதில் மயோனைஸ் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி விடவும். பிறகு 20-30 நிமிடங்கள் வைத்து ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.

நெல்லிக்காய்
கூந்தல் பிரச்சனை என்றாலே நெல்லிக்காய் தான் சிறந்தது. இது உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையை அளிக்க உதவும். முடி வளர்ச்சிக்கு விரும்பத்தக்க பழங்களில் ஒன்று. முடி நிறமியை மேம்படுத்துவதால் தான் நரை முடியில் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது முடிக்கு பளபளப்பும் அளிக்கும்.

எப்படி பயன்படுத்துவது

நெல்லிக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை கடைகளில் வாங்கலாம். வீட்டிலும் தயாரிக்கலாம். இந்த எண்ணெயை இரவு முழுவதும் கூந்தலில் தடவி ஊறவிடலாம் அல்லது இரண்டு மணி நேரம் ஊறவைத்து கூந்தலை அலசலாம். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யலாம்.

ஆரஞ்சு
வைட்டமின் சி மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்த இது முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. உச்சந்தலை முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆரஞ்சுகள் எளிதாக கிடைக்கிறது. இந்த பழத்தில் இருந்து பலன்களை பெற அதிக நேரம் கூட செலவிட வேண்டியதில்லை.

எப்படி பயன்படுத்துவது

தலைமுடியின் அளவை பொறுத்து பெரிய அல்லது சிறிய ஆரஞ்சுகளை எடுத்துகொள்ளுங்கள். இதை தோலுடன் சேர்த்து பிளெண்டரில் மசித்து மென்மையாக கலக்கவும். பிறகு கூந்தலில் தடவி சில மணி நேரங்கள் கழித்து இந்த சிகிச்சையை முயற்சிக்கவும்.

ஆப்பிள்கள்

ஆப்பிள்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் முடி பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் பலவற்றையும் உள்ளடக்கியுள்ளது. பச்சை ஆப்பிளின் தோலை பூசுவது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது முடி உதிர்வதை தடுக்கிறது மற்றும் உச்சந்தலையில் மற்றும் முடியின் பிஹெச் அளவை சமன் செய்கிறது.

எப்படி பயன்படுத்துவது

ஆப்பிளின் சாற்றை அதன் தோலுடன் அப்படியே எடுத்து தலைமுடி முழுவதும் ஈரப்படுத்தவும். சாற்றை உங்கள் முடி முழுவதும் சரியாக பயன்படுத்துங்கள். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசி எடுங்கள். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யுங்கள்.
கொய்யாப்பழம்

கொய்யாபழம் உங்கள் சுவை மொட்டுகளை போன்று கூந்தலுக்கும் நன்மை செய்யகூடியது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான பிரச்சனையற்ற முடியை விரும்பினால் கொய்யா தேர்வு செய்யலாம். தலைமுடியில் மேற்பூச்சாக பூசுவது அலை அலையான கூந்தலை கொடுக்கும்.

எப்படி பயன்படுத்துவது

பழுத்த கொயாப்பழம் தேர்ந்தெடுத்து மசிக்கவும். இதில் சிறிது தேன் மற்றும் சில துளி எலுமிச்சை கலந்து உச்சந்தலை முழுவதும் தடவி விடவும். பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்க வாரத்தில் இரண்டு முறை இதை செய்யவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker