முதலாவது வழிமுறை: எலுமிச்சை பழம் ஒன்றை இரண்டாக அறுத்து 8 அல்லது 10 இலவங்க பூவை வைத்து, வீட்டின் நடு பகுதியில் வைத்தால் கொசுகள் வீட்டுக்குள் வராது.
இரண்டாவது வழிமுறை: பாத்திரத்தில் ஒரு தம்பளர் தண்ணீரை ஊற்றிச் சூடாக்கி, அதில் வேப்ப இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கட்டி, கற்பூரம் ஒரு தேக்கரண்டி போட்டு கால் தம்பளர் அளவுக்கு நீர் சுண்டிய நிலையில் அதை வடிகட்டி, மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டி இயந்திரத்தில் ஊற்ற வேண்டும். பின்னர், அதனுடன் நறுமண எண்ணெய் சிறிது ஊற்றி படுக்கை அறையில் வைத்துப் பயன்படுத்தலாம்.
மூன்றாவது வழிமுறை: கொசுவை விரட்ட சிறப்பு எண்ணெய் தயாரிக்கலாம். நாட்டு வேப்ப எண்ணெய் 50 மி.லி. எடுத்துக்கொண்டு, அதில் 5 கற்பூர வில்லைகளைப் பொடி செய்து எண்ணெய்யில் போட்டு நன்கு கலக்க வேண்டும். கற்பூரம் கரைந்த பின்னர், அதைக் கொசு விரட்டி இயந்திரத்தில் ஊற்றி மின்சாரத்தில் இயங்க செய்ய வேண்டும். அப்போது அந்த திரவம் ஆவியாகி வீடு முழுவதும் பரவி கொசுவை அண்ட விடாது செய்யும்.
நான்காவது வழிமுறை: ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்), கால் லிட்டர் வேப்ப எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து வீட்டில் படுக்கை அறை, சமையல் அறையில் ஊற்றி பஞ்சு திரியிட்டு எரிய விட்டால், கொசுகள் உள்ளே வராது.
ஐந்தாவது வழிமுறை: விளக்கெண்ணெய்யை ஊற்றி அதில் திரிக்கு பதில் குபேரன், பெருந்தும்பை, பேய் விரட்டி ஆகியவற்றின் பச்சை இலைகளைப் பறித்து, திரி போல சுற்றி விளக்கில் இட்டு எரிய விட்டால் கொசுக்கள், பூச்சிகள் வராது. இதற்கான ஆதாரம் அகத்தியர் குண பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.