உங்களின் பாதுகாப்புக்காக, உங்களின் சேமிப்புகள் மற்றும் வங்கிகணக்கில் இருக்கும் பேலன்ஸ் உட்பட எந்த விவரங்களையும் நீங்கள் மற்றவர்களிடம் பகிரக்கூடாது.
சந்தோஷம், மகிழ்ச்சியான செய்திகளை பகிர்வதைப் போல, நம்முடைய வருத்தம், கவலை, ஏமாற்றம் ஆகியவற்றையும் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம். ஆனால், ஒரு சில விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதைபற்றிய விவரங்கள் இங்கே.
உங்கள் பார்ட்னர் சம்மந்தப்பட்ட விஷயங்கள் : ஆண் அல்லது பெண் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களிடம் கணவன் / மனைவி பற்றி பகிர்த்து கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால், கணவன் மனைவி பற்றிய விஷயங்கள் இருவர் சம்மந்தபட்டது மட்டுமே. உங்கள் பார்ட்னரின் பயம், அவரின் பழக்க வழக்கங்கள், அவருடனான சிறு சிறு சிக்கல்கள் ஆகியவற்றை நீங்கள் மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
உங்கள் குறிக்கோள்கள் : எல்லாருக்குமே வாழ்வில் ஏதேனும் சாதிக்கக் வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உங்களுக்கு அதைப்போன்ற குறிக்கோள்கள் இருக்கும் போது, அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் அமைதியாக அதை அடையும் வழியில் முன்னேறிச் செல்ல வேண்டும். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படும். முதலாவதாக, உங்களை மற்றவர்கள் கேலி செய்யக் கூடும். இரண்டாவது, உங்களால் குறிக்கோளை அடைய முடியவில்லை என்றால், நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பல்வேறு கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களை பெரிதாக பாதிக்கும்.
நீங்கள் செய்யும் உதவிகள் : வலது கை செய்யும் உதவியை இடது கைக்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்பது முன்னோர் கூற்று. நீங்கள் தற்செயலாக உதவி செய்தாலும், திட்டமிட்டு தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்தாலும் சரி, அதை எப்போதும் யாரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் செய்த உதவிகளை மற்றவர்களே தெரிந்து கொண்டு உங்களைப் பாராட்டுவார்கள். நீங்கள் உதவி செய்ததை வெளியே கூறினால் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்வீர்கள். எப்போதும் பணிவாக இருக்கவும்.
உங்கள் சேமிப்பு, வங்கிக்கணக்கு மற்றும் பேனல்ஸ் : உங்களின் பாதுகாப்புக்காக, உங்களின் சேமிப்புகள் மற்றும் வங்கிகணக்கில் இருக்கும் பேலன்ஸ் உட்பட எந்த விவரங்களையும் நீங்கள் மற்றவர்களிடம் பகிரக்கூடாது.
உங்கள் பலவீனங்கள் : பலவீனம் இல்லாத நபர் என்று யாருமே கிடையாது. ஆனால், பலவீனம் ஒரு நபரின் தனிப்பட்ட விஷயம் அதை நீங்கள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதைப்பற்றி பிறர் தெரிந்து கொண்டால், உங்களுக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் குடும்பப் பிரச்சனைகள் : எப்படி உங்கள் பார்ட்னர் பற்றிய விஷயங்கள், நீங்கள் இருவர் சம்மந்தப்பட்டதோ, உங்கள் குடும்பப் பிரச்சனைகளும் உங்கள் குடும்பத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். யாராவது ஆறுதல் அளிப்பார்கள் அல்லது பிரச்சனையை தீர்பார்கள் என்ற நம்பிக்கையில் நீங்கள் குடும்பப் பிரச்சனைகளை பகிர்ந்தால், அவர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கேலி செய்யக்கூடும்.
உங்கள் திறமைகள் : தேவையான இடத்தில் மற்றும் தேவைப்படும் இடத்தில் மட்டுமே உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள். தவறான இடத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவது வீணாகும், அது மட்டுமின்றி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே, சரியான வாய்ப்புகளை கண்டறிந்து உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்லுங்கள்.