புதியவைவீடு-தோட்டம்

இனிமேல் வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராது: எளிய வழிகள்

வெங்காயத்தில் என்சைம் எனும் செல்கள் உள்ளது. எனவே நாம் வெங்காயத்தை நறுக்கும் போது, அந்த என்சைம் செல்கள் உடைவதால், நம் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அதை தடுக்க சில எளிய வழிகள் உள்ளது.

  • வெங்காயம் நறுக்கும் போது கூர்மையான கத்தி கொண்டு வெங்காயம் நறுக்க வேண்டும். இதனால் கண்ணீர் வருவதை தடுக்கலாம்.
  • வெங்காயத்தை வெட்டும் போது நீரில் வைத்து வெட்டினால் கண்களில் இருந்து கண்ணீர் வராது.
  • வெங்காயம் வெட்டும் முன் அதை 10-15 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்து நறுக்கினால் வெங்காயத்தில் உள்ள என்சைம் செல்கள் உடையாது.
  • வெங்காயம் வெட்டும் முன் நீரில் முக்கி எடுத்து வெட்டலாம். ஆனால் அந்த வெங்காயத்தின் சுவையில் மாற்றம் ஏற்படலாம்.
  • வெங்காயம் வெட்டும் போது, அருகில் ஆவி வெளிப்படும் அளவில் சுடுநீர் வைத்து கொண்டு நறுக்கினால் கண்ணீர் வராது.
  • வெங்காயம் வெட்டும் போது இறுக்கமான கண்ணாடி அணிந்துக் கொண்டு வெட்டினால், கண்ணீர் வராமல் தடுக்கலாம்.
  • வெங்காயம் நறுக்கும் போது விசில் அடிக்க வேண்டும். ஏனெனில் விசில் அடிக்கும் போது, வெளிவரும் காற்று கண்ணீர் வருவதை தடுக்கிறது.
  • வெங்காயம் நறுக்கும் போது அருகில் சிறிய மெழுகுவர்த்தியை பற்ற வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் மெழுகில் இருந்து வெளிவரும் கேஸ் கண்ணீர் வருவதை தடுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker