புதியவைவீடு-தோட்டம்

உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் முளைகட்டாமல் வைத்துக் கொள்வது எப்படி?…

உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் முளைகட்டாமல் வைத்துக் கொள்வது எப்படி?...

பலர் உருளைக்கிழங்கு வாங்கிய பிறகு சில நாட்களில் அது முளைத்து இருப்பதை காணலாம். எதனால் இப்படி ஆகிறது. உருளைக்கிழங்கு முளைப்பதை தடுக்க என்ன செய்யலாம். அதற்கான எளிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.நமது வீடுகளில் பலர் ஒரு வாரத்திற்கான காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கின்றனர். கடை வீதி தூரமாக இருத்தல் போன்ற காரணங்களால் மக்கள் இந்த முறையை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் வாங்கி வரும் காய்கறிகளை ஒரு வாரத்திற்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பெரிய வேலையாகும். அதில் உருளைக் கிழங்கைப் பொருத்தவரையில் நீண்ட நாட்கள் கெடாது. ஆனால் முளைக்கத் தொடங்கிவிடும். அதை எப்படி தடுப்பது என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு
ஒவ்வொரு காய்கறியையும் ஒவ்வொரு வகையில் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவை அழுகிவிடும் அல்லது காய்ந்துவிடும். மசாலா மற்றும் தானியங்கள் போல காய்கறிகளை எளிதாக சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது. உலகம் முழுக்க உள்ள மக்கள் பொதுவாக விரும்பும் உணவாக உருளை கிழங்கு உள்ளது. அதனால்தான் பெரிய நிறுவனங்கள் கூட உருளை கிழங்கு தொடர்பான உணவுகள் மீது ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் உருளை கிழங்கை பாதுகாப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
​பாதுகாக்கும் வழிகள்
இவை எளிதில் அழுகும் தன்மை கொண்டவை அல்ல என்றாலும் இந்த உருளைக்கிழங்குகள் வெகு நாட்கள் இருந்தால் அவை முளைக்க துவங்குகின்றன. இது கிழங்கு வகை தாவரம் என்பதால் இதில் செடி முளைக்க துவங்குகிறது. மேலும் இது உருளைக்கிழங்கின் சுவையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் முளைத்த உருளைக்கிழங்கில் உள்ள கிளைக்கோல் கலாய்டுகள் மனிதர்களிடம் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே உருளைக்கிழங்கை பாதுகாக்கும் சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
​இருண்ட இடத்தில் சேமிக்கவும்
நீங்கள் காய்கறி சந்தைக்கு சென்று காய்கறி வாங்குகிறீர்கள் எனில் அங்கு ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அங்கு விற்பனையாளர்கள் உருளைக்கிழங்கை அடர் பழுப்பு நிற சாக்கில் அல்லது வெளிச்சம் எளிதில் செல்ல முடியாத நிழலான இடத்தில் உருளைக்கிழங்கை வைத்திருப்பர். ஏனெனில் வெயில் படாத இடத்தில் வைப்பதன் மூலம் உருளைக்கிழங்கை புதியதாகவே வைத்திருக்க முடியும்.எனவே உங்கள் உருளைகிழங்கை வெப்பம் வராத இருட்டான இடத்திலோ அல்லது பெட்டியிலோ வைக்கவும். ஆனால் ஒரு வேளை உருளைக்கிழங்கு ஈரமாக இருந்தால் அது உலர்வதற்கு நாம் அதை வெயிலில்தான் வைத்து ஆக வேண்டும். இல்லையெனில் அது இன்னும் அதிக வேகமாக முளைக்கும். எனவே ஈரப்பதமாக இருக்கும் உருளையை முதலில் வெயிலில் காய வைத்து பிறகு சேமிக்கவும்.
​மூலிகைகள் உதவுகின்றன
பச்சை மூலிகைகள் உருளைக்கிழங்கை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் மேலும் அவை முளைப்பதை தடுக்கவும் உதவுகின்றன. இதனால் உருளைக்கிழங்குகள் மூலிகைகளோடு வைக்கப்படும்போது முளைப்பதில்லை. இதற்கு முதலில் ஒரு பருத்தி பையை எடுத்துக் கொள்ளவும். அந்த பையில் பச்சை மூலிகைகளைச் சேர்க்கவும். கறிவேப்பிலை, வேப்பிலை, துளசி இப்படி எதையாவது ஒன்றை போட்டு வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உருளைக்கிழங்கு முளைப்பதை தடுக்க முடியும்.
​பழங்களையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் வைக்க வேண்டாம்
பலர் தங்களது வீட்டில் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை வைக்கும் இடத்திலேயே உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் வைக்கின்றனர். ஒரு வேளை பழங்கள் ஈரப்பதமாக இருந்தால் அந்த ஈரப்பதம் உருளைக்கிழங்கையும் அடைகிறது. அப்போது உருளை முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே இவை இரண்டையும் தனி தனியாக வைத்திருப்பது மிக முக்கியமாகும்.முக்கியமாக உருளைக்கிழங்கை 50 டிகிரி வெப்பநிலைக்கு கீழ் உள்ள இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். எனவே அதை ஜன்னல் அருகிலோ அல்லது வெளிச்சம் படும் இடத்திலோ வைக்க வேண்டாம்.
​உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம்
உருளைக்கிழங்கை 50 டிகிரி வெப்பநிலைக்கு கீழ் உள்ள இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். இதனால் உருளைக்கிழங்கு ஈரப்பதமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பலர் குளிர்சாதன பெட்டியில் வைப்பது மூலம் உருளைக்கிழங்கு புதியதாகவே இருக்கும் என நினைக்கின்றனர். வெங்காயமும் இதே தன்மையை கொண்டு காணப்படுகிறது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டுமே கூடுதல் ஈரப்பதம் காரணமாக கெடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே இவை இரண்டையும் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டாம். மேலும் உருளைக்கிழங்கை உலர்ந்த இடத்தில் வைத்தே பாதுகாக்க வேண்டும்.
​வெங்காயம் மற்று உருளைக்கிழங்கை ஒன்றாக வைக்க வேண்டாம்

நீங்கள் சந்தைக்கு சென்றீர்கள் என்றால் அங்கே விற்பனையாளர் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒரே கூடையில் வைத்திருக்க மாட்டார். ஏனெனில் வெங்காயமானது உருளைக்கிழங்கை வேகமாக முளைக்க செய்யும். எனவே உருளைக்கிழங்கு வேகமாக முளைக்க கூடாது என நினைப்பவர்கள் இவை இரண்டையும் கலக்காமல் பிரித்து வைப்பது நல்லது.இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் உருளைக்கிழங்கு முளைப்பதை தடுத்து சில நாட்களுக்கு அதை பாதுகாக்க முடியும்.

இதையும் படியுங்கள் : வீட்டிலேயே எளிமையான முறையில் இறந்த செல்களை நீக்க சில குறிப்புகள் !!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker